சமையல்!

கசகசாவை  ஊற வைத்து மைய அரைக்கவும். பச்சரிசியுடன் இளநீர், தேங்காய்ப் பால்  சேர்த்து குக்கரில் வேகவைத்து மசிக்கவும். பின்னர், பிரெஷர் பேனில்  மாற்றி அத்துடன்  அரைத்த  கசகசா விழுது,  பொடித்த கற்கண்டு
சமையல்!

இளநீர்  பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி  -  1 கிண்ணம்
கசகசா -  அரை கிண்ணம்
இளநீர்  - 2 கிண்ணம்
தேங்காய்ப் பால் -  1 கிண்ணம் இளம்  தேங்காய்த் துண்டுகள் - முக்கால் கிண்ணம், பொடித்த கற்கண்டு - அரை கிண்ணம்

செய்முறை: கசகசாவை  ஊற வைத்து மைய அரைக்கவும். பச்சரிசியுடன் இளநீர், தேங்காய்ப் பால்  சேர்த்து குக்கரில் வேகவைத்து மசிக்கவும். பின்னர், பிரெஷர் பேனில்  மாற்றி அத்துடன்  அரைத்த  கசகசா விழுது,  பொடித்த கற்கண்டு சேர்த்து  நன்கு கிளறவும்.  தேங்காய்த் துண்டுகளால்  அலங்கரித்து பரிமாறவும்.  கசகசாவும், தேங்காய்ப் பாலும்  சேர்ந்து அலாதி சுவையுடன்   இருக்கும்.

ரவா உருண்டை

தேவையானவை:

ரவை  -  1 கிண்ணம்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் -  3
கொத்துமல்லி -  சிறிதளவு
உப்பு,  எண்ணெய் -  தேவைக்கேற்ப 
கறிவேப்பிலை  -  சிறிது

செய்முறை:  உருளைக்கிழங்கை வேகவைத்து  மசிக்கவும்.   பின்னர்,  மசித்த உருளைக்கிழங்குடன், ரவை, பொடியாக  நறுக்கிய பச்சைமிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, கலக்கவும்.  சூடான  எண்ணெய்யில்,   வடைகளாகத் தட்டி,  மொறு மொறுவென  பொரித்து எடுக்கவும்.  சுவையான  ரவை  உருண்டை தயார்.

மாதுளம்  பழம்  பொங்கல்

தேவையானவை:

மாதுளை  முத்துக்கள்  - 2 கிண்ணம்
பச்சரிசி -  முக்கால்  கிண்ணம்
பனங்கற்கண்டு - அரை கிண்ணம்
முந்திரி, பாதாம் -  தலா  10
நெய் -  2  தேக்கரண்டி

செய்முறை:   பச்சரிசியை,  வாணலியில்  சிவக்க  வறுத்துக் கொள்ளவும். பின்னர்,  மாதுளம்  முத்துக்களை   மிக்சியில்  அரைத்து சாறு எடுத்து வடிகட்டிக் கொள்ளவும். பனங்கற்கண்டுடன்  2 கிண்ணம்  தண்ணீர்  சேர்த்து,   அடுப்பில் வைக்கவும். கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.  முந்திரி, பாதாமை, கரகரப்பாக பொடிக்கவும். ப்ரெஷர் பேனில், பச்சரிசி, மாதுளம் சாறு, பனங்கற்கண்டு, தண்ணீர், பொடித்த பாதாம், முந்திரி, நெய் சேர்த்து கலக்கவும். 3 விசில் விடவும்.  பின்னர்,  திறந்து, நன்கு கிளறி, மாதுளம் முத்துக்களால்  அலங்கரித்து  பரிமாறவும். 


சாயனம்

தேவையானவை:

அரிசி மாவு  -  கால் கிண்ணம்
கெட்டி  தேங்காய்ப்பால் மற்றும்
நீர்த்த தேங்காய்ப்பால்  - தலா  1 கிண்ணம்
நெய் -  2 தேக்கரண்டி
பொடித்த வெல்லம் -  1 கிண்ணம்
பொடியாக  நறுக்கிய  தேங்காய் -   2 தேக்கரண்டி

செய்முறை:   வாணலியில்   நெய்விட்டு,  தேங்காய்த்  துண்டுகளைச்   சேர்த்து, சிவக்க வறுத்து   எடுத்துக் கொள்ளவும்.  அதே  வாணலியில்,  நெய் சேர்த்து அத்துடன் அரிசி மாவை சேர்த்து,   வாசனை வரும்வரை  நன்கு  வறுக்கவும். 

பின்னர், நீர்த்த  தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர்,   கெட்டி தேங்காய்ப்பால்,  வெல்லம்  சேர்த்து   கொதிக்க வைக்கவும். எல்லாமாக  சேர்த்து நன்கு கொதித்து  வரும்போது,  அடுப்பை  அனைக்கவும் வறுத்து வைத்துள்ள தேங்காய்த்  துண்டுகளைச்  சேர்த்து பரிமாறவும்.   சுவையான சாயனம் தயார்.


குலாடா ஃ பிர்ணி

 தேவையானவை:

பாசுமதி  அரிசி  -  2 தேக்கரண்டி
பால்  - 1 லிட்டர்
சர்க்கரை  - அரை கிண்ணம்
பன்னீர் ரோஜா இதழ்கள்  - கால்  கிண்ணம்

செய்முறை:   பாசுமதி   அரிசியை   பாலில்   ஊற வைக்கவும்.  ரோஜா இதழ்களுடன் சேர்த்து  மைய  அரைக்கவும்.  வாணலியில்  பால் சேர்த்து அரைத்த  விழுது சேர்க்கவும். சர்க்கரை  சேர்க்கவும்.  கொதித்து  வரும்போது, அடுப்பை  அணைக்கவும்.  ஃபிரிட்ஜில்  வைத்து  ஜில்லென பரிமாறவும்.சுவையான குலாடா  ஃபிர்ணி தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com