சுடச்சுட

  
  AMY

  ஜார்ஜ் பணயிவ்டெள. முப்பது வயது பெரும் பணக்கார இளைஞர்தான் எமியின் நண்பர். இவர் தான் நடிகை எமி ஜாக்ஸனைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவராம். 
  இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன் உலக பதின்வயது அழகி, வடிவழகி பட்டங்களை வென்றவர். 2010- இல் "மதராசபட்டணம்' படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் எமி அறிமுகமானார். 
  எமி ஜாக்ஸன் இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் ஜனவரி 31-ஆம் தேதி 1991-இல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பணியாற்றியவர். அமெரிக்காவின் டெக்சாசில் 2008-இல் நடைபெற்ற உலக பதின்வயது அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து லிவர்பூல் அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார். இது தவிர உலக அளவில் சுமார் இருபது முறை அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  எமி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் நடித்திருக்கிறார். தமிழில் விக்ரமுடன் "ஐ' படத்திலும், "2.0' படத்தில் ரஜினியுடனும் வலம் வந்தார். 
  இந்த புத்தாண்டின் துவக்கத்தில் எமி, ஜார்ஜுடன் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். "வாழ்க்கையில் புதிய சாகசம் தொடக்கம். "ஐ லவ் யூ..' என்னை உலகின் மிகவும் சந்தோஷமிக்கப் பெண்ணாக ஆக்கிய ஜார்ஜுக்கு நன்றி' என்று எமி தெரிவித்திருக்கிறார். காதல் கல்யாணத்தில் முடியுமா?
  - பனுஜா
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai