கபடி வீராங்கனையாக ரிச்சா சட்டா
By DIN | Published On : 24th July 2019 10:57 AM | Last Updated : 24th July 2019 10:57 AM | அ+அ அ- |

அஸ்வினிஐயர் திவாரி இயக்கதில் "பங்கா' என்ற படத்தில் கபடி வீராங்கனையாக ரிச்சா சட்டா நடிக்கிறார். இந்தப் படத்தில் பிகாரி இனத்தை சேர்ந்த ஒருவரை நடிக்க வைக்க முயற்சித்தபோது ரிச்சா சட்டாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. "நான் எங்கு பிறந்து வளர்ந்தேன் என்பது சிலருக்குத்தான் தெரியும். என் தாய் வழியில் உள்ளவர்கள் பிகாரிகள் என்பதால் எனக்கு பீகாரி கலாசாரமும், பல மொழிகளும் தெரியும். கபடியை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததை வரமாக கருதுகிறேன்'' என்கிறார் ரிச்சா சட்டா.