பத்திரிகையாளரிடம் மோதிய கங்கனா
By DIN | Published On : 24th July 2019 11:00 AM | Last Updated : 24th July 2019 11:00 AM | அ+அ அ- |

ஏக்தா கபூரின் "ஜட்ஜ்மெடன்டல் ஹை க்யா' என்ற படத்தின் பாடல் அறிமுக விழாவில் கலந்து கொண்ட படத்தின் நாயகி கங்கனா ரனாவத், விழாவுக்கு வந்திருந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஜஸ்டின் ராவ் என்பவரை அழைத்து, தன்னுடைய இயக்கத்தில் வெளியான "மணிகர்னிகா' படத்தைப் பற்றி மோசமாக விமர்சனம் செய்ததற்கு அவரை கண்டபடி திட்டியுள்ளார். இதற்கு ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இனி கங்கனா தொடர்பான நிகழ்ச்சிகளையோ, அவரது படங்களையோ பத்திரிகைகளில் வெளியிடுவதில்லை என முடி வெடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஏக்தா கபூர், தன்னுடைய படம் வெளியாகும்போது பாதிக்க படலாமென கருதி, கங்கனா சார்பில் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் கங்கனாவோ வருத்தம் தெரிவிக்க மறுத்துள்ளதால், பிரச்னை நீடிக்கிறது.