கால்பந்து வர்ணனையாளரான வீராங்கனை!

முன்னாள் இந்திய கால்பந்து வீராங்கனை தலிமா சிப்பர். தொடர்ந்து விளையாட்டுத்துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டிருப்பதால், ஃபெடரேஷன் ஆஃப் இன்டர் நேஷனல் புட்பால் அசோசியேஷன் நடத்தவுள்ள
கால்பந்து வர்ணனையாளரான வீராங்கனை!

முன்னாள் இந்திய கால்பந்து வீராங்கனை தலிமா சிப்பர். தொடர்ந்து விளையாட்டுத்துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டிருப்பதால், ஃபெடரேஷன் ஆஃப் இன்டர் நேஷனல் புட்பால் அசோசியேஷன் நடத்தவுள்ள 2019 எப் ஐஎப்ஏ மகளிர் உலக கோப்பையின் போது வர்ணனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கால்பந்து விளையாட்டில் ஆர்வமேற்பட்டது மற்றும் தன்னுடைய அனுபவங்களை தலிமா நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
 " என்னுடைய தந்தை ஒரு விளையாட்டு வீரர். தனிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு என்னையும் அழைத்துச் செல்வார். குழுக்கள் விளையாடும் போட்டிகளுக்கு அல்ல. நான் தனியாக பயிற்சிப் பெற்றால்தான் நல்ல அங்கீகாரம் கிடைக்குமென்று சொல்வார். விருப்பமான விளையாட்டை தேர்ந்தெடுக்கும்படி சொன்னபோது எனக்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.
 கால்பந்து விளையாட்டைப் பொருத்தவரை உடல் ரீதியாக சற்று கடினமான விளையாட்டுதான். மைதானத்தில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இருந்தாக வேண்டும். காலையில் நான் 5 மணிக்கு பயிற்சியைத் தொடங்குவேன். சில சமயங்கலில் இரவிலும் பயிற்சி பெறுவதுண்டு. இந்த விளையாட்டில் கடினமான பயிற்சிப் பெற்றால் நான் சிறப்பான இடத்தைப் பெற முடியும். பதினான்கு வயதில் நான் கால்பந்து பயிற்சி பெறத் தொடங்கினேன். இந்தியா சார்பில் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நிலைமை மாறியது. ஜெர்சி மீது இந்திய அணி பேட்ஜ் அணிந்தது பெருமையாக இருந்தது. மகளிர் கால்பந்து விளையாட்டில் மிகப்பெரிய சாதனை படைக்கப்போவதாக என் மனதில் தோன்றியது.
 இந்த விளையாட்டுத்துறையை நம்பி வாழ்க்கை நடத்துவதும் கடினமாக இருந்தது. சவால்களை சந்திக்க பொருளாதார ரீதியில் ஆதரவும் இல்லை. வாழ்க்கையை நடத்த வேறு வேலையைத்தேட வேண்டியதாயிற்று. மேலும் இந்த விளையாட்டில் பாராட்டோ, அங்கீகாரமோ சுலபத்தில் கிடைக்காது.
 இதனால் பெண்கள் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டக்கூடாது என்று நான் சொல்ல மாட்டேன். எனக்கு இந்தப் பயணம் தடுமாற்றத்தைக் கொடுத்தது. ஆனால் இன்று மகளிர் கால்பந்து போட்டிகள் சர்வதேச அளவில் பிரபலமாகிவிட்டது. மேலும் இந்த விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு ஊக்கமும், ஸ்பான்ஸர் செய்வதும் அதிகரித்துள்ளது. நிலைமை மெதுவாக மாறினாலும் இன்னும் பிரபலமாக சற்று அவகாசம் தேவைப்படலாம்.
 இந்த விளையாட்டில் நான் காட்டிய தீவிரம் இன்றும் என்னை விட்டு அகலவில்லை. நிறைய பெண்கள் இந்த விளையாட்டில் இறங்கினாலும் ஒவ்வொருவருடைய தீவிர உணர்வுகளும் வேறுபடலாம்.
 வெற்றி பெற்றபின் தீவிரம் குறையக்கூடும். இந்த விளையாட்டில் வேகம்தான் முக்கியம்.
 விளையாட்டுத் துறையில் பெண்கள் ஆர்வம் காட்டும்போது சமூகம், குடும்பம், பாலின வேறுபாடு போன்ற பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.
 இப்போது விளையாட்டுத் துறையில் பிரபலமானவர்களைப் பற்றிய பல வரலாற்று படங்கள் வருவதால், இத்துறையில் ஈடுபட பல பெண்கள், ஆர்வம் காட்டுகின்றனர். இது வரவேற்கதக்க மாற்றம். அதே நேரத்தில் அவர்களுக்கு ஊக்கமும், பொருளாதார ரீதியாக உதவியும் அளிக்க வேண்டியது அவசியம் என்கிறார்'' தலிமா.
 - பூர்ணிமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com