இலக்கியம் படித்தவர், இப்போது விவசாயி! 

கரூர் அருகேயுள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவர் பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்து தேர்ச்சி பெற்றவர்.
இலக்கியம் படித்தவர், இப்போது விவசாயி! 

கரூர் அருகேயுள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவர் பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்து தேர்ச்சி பெற்றவர். தற்போது முழு நேர விவசாயியாக மாறியிருக்கிறார். எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது? அவரிடம் பேசினோம்:
 "நான் திருமணமாகி குடும்பத்துடன் வசிப்பது கிருஷ்ணாராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரம் கிராமம். இங்கு பெரும்பாலான பகுதிகள் விவசாய நிலம். என்னுடைய கணவர் நாகராஜன் பல பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். அதனை வெற்றிகரமாக அறுவடை செய்து லாபம் பார்க்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அப்படி அவர் பயிர் செய்த முக்கிய பயிர்களில் ஒன்று கரும்பு.
 அந்த கரும்பை வெற்றிகரமாக பயிரிட்டு அறுவடை செய்து லாபம் பார்க்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் விருப்பம். அந்தப் பொறுப்பை என்னிடம் கொடுத்தார். ஆங்கில இலக்கியம் படித்த எனக்கு விவசாயப்பணியா என்று யோசித்தேன். "உன்னால் முடியும் களத்தில் இறங்கி துணிச்சலுடன் வேலை செய்'' என்றார். அவர் வேண்டுகோளை ஏற்று நானும் களத்தில் இறங்கினேன்.
 கரும்புக்கு, நெல் சாகுபடியை விட குறைவாகத்தான் தண்ணீர் தேவைப்படும். ஒரு வயலில் ஒரு தடவை கரும்புக்கரணை நட்டுவிட்டால், அந்த விவசாயிக்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் பலன் தரும் பணப்பயிர் இது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வேறு பயிர் சாகுபடி செய்து கொள்ளலாம். அதுவும் ஓர் ஆண்டு மட்டுமே பயிர் செய்துவிட்டு மீண்டும் கரும்பு சாகுபடிக்கே நாங்கள் வந்துவிடுவோம். நாள்தோறும் பராமரிக்க வேண்டிய தேவை கரும்பு பயிருக்கு கிடையாது. சற்று ஒய்வாக குடும்ப வேலை பார்த்து கொள்ளலாம். கணவர், குழந்தைகளை கவனித்து கொள்ளலாம்'' என்றவரிடம், வயலில் நீங்கள் செய்யும் பணிகள் என்ன என்று கேட்டோம்:
 "முதலில் வயலில் பார் புடிச்சி கரும்புக் கரணைகளை நடணும். கரணை நட்ட ஐந்து நாட்களில் களைக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும். அத்துடன் நம்முடைய வேலை முடிந்துவிட்டது. 30 நாட்கள் காத்திருந்தால் நட்ட கரணையில் இருந்து கிளைப்பருவம் வந்துவிடும். அதனைத் தொடர்ந்து 35 நாள்களுக்கு ஒரு முறை வீதம், ஆண்டுக்கு மூன்று முறை உரம் வைப்பது அவசியம். இப்படியாக ஒவ்வொரு கட்டமாக கடந்து ஐந்தாவது மாதம் கரும்புத் தோகைகளை உரித்து கீழே போட்டு விட வேண்டும். அந்த தோகைகள் மண்ணில் மக்கி அவைகளே உரமாகிவிடும்.
 இதே போன்று ஏழாவது மாதம் ஒரு தடவை அதே போல கரும்புத் தோகைளை உரிச்சுப் போடணும். கரும்பு பன்னிரெண்டு மாத பணப்பயிர். இந்த பன்னிரெண்டு மாதத்தில் குறைந்து 40 முறையாவது கரும்புக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பணப்பயிர்களில் லாபம் தரக்கூடியதில் கரும்பு முக்கியமானது'' என்கிறார் முழு நேர விவசாயியான லதா.
 - ராஜன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com