மீண்டும் வெள்ளித்திரையில் ..!

தென்னகத்தின் "சூப்பர் லேடி' என்று பாராட்டப்பட்ட நடிகை விஜயசாந்தி பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.
மீண்டும் வெள்ளித்திரையில் ..!

தென்னகத்தின் "சூப்பர் லேடி' என்று பாராட்டப்பட்ட நடிகை விஜயசாந்தி பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறியதும் நடிப்பிற்கு விஜயசாந்தி முழுக்கு போட்டார். "மன்னன்' படத்தில் ரஜினியின் நாயகியும் விஜயசாந்திதான்..! தெலுங்கு படத்தின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு நடிக்கும் "சரிலேறு நீகேவ்வறு' படத்தில் விஜயசாந்தி நடிப்பில் தனது இரண்டாம் அத்தியாயத்தை தொடங்குகிறார்.
 "நான் 1980 - இல் அறிமுகமானதே அன்றைய சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் ஜோடியாகத்தான். அவரது மகன் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறேன் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது' என்கிறார் விஜயசாந்தி.
 - அங்கவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com