சமையல்! சமையல்!

முட்டை கோஸ் பால் அல்வா, ராகி முட்டைகோஸ் ரொட்டி, தினை மாவு மசாலா சப்பாத்தி, கோதுமை மாவு முட்டைகோஸ் கொழுக்கட்டை

முட்டை கோஸ் பால் அல்வா

தேவையானவை
முட்டைகோஸ் - கால் கிலோ
பால் - அரை லிட்டர்
வெல்லம் பொடித்தது - கால் கிலோ
நெய் - 100 மி.லி, ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 10
செய்முறை: முட்டை கோûஸத் துருவி வைக்கவும். அடி கனமான வாணலியில் வைத்து 1 தேக்கரண்டி நெய்விட்டு சூடானதும் முந்திரி பருப்பைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். துருவிய முட்டைகோûஸப் போட்டு 2 நிமிடம் வதக்கி, பிறகு பால்விட்டு வேக விடவும். பால் வற்றி, கோஸ் வெந்தவுடன் பொடித்த வெல்லம், நெய் விட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, ஏலக்காய்த் தூள் போட்டுக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி விடவும். சிறிது ஆறியதும், முந்திரிப் பருப்பை அதில் மேலாகப் போட்டு அழுத்தி விடவும். வில்லைகள் போட்டுப் பரிமாறவும்.

ராகி முட்டைகோஸ் ரொட்டி

தேவையானவை
கேழ்வரகு - 2 கிண்ணம்
துருவிய முட்டைகோஸ் - அரை கிண்ணம்
பாசிப்பருப்பு - அரை கிண்ணம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கிண்ணம்
இஞ்சி துருவியது - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 மேசைக்கரண்டி
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மல்லித்தழை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: பாசிபருப்பை அரை வேக்காடாக வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மீதி உள்ள எல்லாப் பொருட்களையும் போட்டுக் கலந்து, தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். மாவைச் சிறு சிறு உருண்டைகளாக, எலுமிச்சம் பழ அளவுக்கு எடுத்து, ஒரு வாழை இலை/ பலர் கவர் மீது எண்ணெய் தடவி, அதன்மீது மாவு உருண்டையை வைத்து வட்டமாகத் தட்டவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடான
வுடன் தட்டிய ரொட்டியைப் போட்டுச் சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக விடவும். இந்த ராகி முட்டை கோஸ் ரொட்டி சுடச்சுடச் சாப்பிடும் போது தொட்டுக் கொள்ள எதுவும் வேண்டாம். ஆறிய பிறகு தக்காளி சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

தினை மாவு மசாலா சப்பாத்தி

தேவையானவை:
கோதுமை மாவு - 1 கிண்ணம்
தினை மாவு - 1 கிண்ணம்
சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையானவை
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் - சுட்டு எடுக்க
செய்முறை: கோதுமை மாவு முதல், எண்ணெய் - 1 தேக்கரண்டி வரை ஒரு பாத்திரத்தில் கலந்த, தண்ணீர் கெட்டியாகப் பிசையவும். அரைமணி நேரத்திற்கு பிறகு சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு வேகவிட்டு எடுக்கவும். தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷன்.

கோதுமை மாவு முட்டைகோஸ் கொழுக்கட்டை

தேவையானவை
கோதுமை மாவு - 1 கிண்ணம்
துருவிய முட்டைகோஸ் - முக்கால் கிண்ணம்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி துருவல் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கடுகு, உ.பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
உப்பு - தேவையானது, தண்ணீர் - 2 கிண்ணம்
எண்ணெய் - 1 மேசைக் கரண்டி
செய்முறை: ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்துச் சூடானவுடன் கோதுமை மாவைப் போட்டு நன்கு மணம் வரும் வரை வறுத்து எடுக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைக்கவும். சூடானதும் கடுகும், உ. பருப்பைப் போடவும். பொரிந்தவுடன் பெருங்காயத் தூள், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி துருவல், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு முட்டைகோஸ் துருவலைப் போட்டு 2 நிமிடம் வதக்கித் தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். கொதி வரும்போது வறுத்த மாவைப்போட்டுக் கிளறவும். தீயைக் குறைத்து வைக்கவும். மாவு வெந்து கெட்டியானவுடன், தேங்காய்த் துருவல் போட்டுக் கலந்து அப்படியே மூடி வைக்கவும். அடுப்பை அனைத்து விடவும். 10 நிமிடம் கழித்து, நன்றாகப் பிசைந்து, உருண்டைகளாக நமக்கு வேண்டிய வடிவத்தில் உருட்டி, இட்லிப் பானையில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். இதற்குத் தொட்டுக் கொள்ள தேங்காய்ச் சட்னி, தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.
- ஆர். பிருந்தா, மதுரை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com