சிறப்பு மிகு சீதாப்பழம்!

கஸ்டர்ட் ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவைமிகுந்த பழமாகும்.
சிறப்பு மிகு சீதாப்பழம்!

கஸ்டர்ட் ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவைமிகுந்த பழமாகும். குளுக்கோஸ் வடிவில் நிறைந்த அளவு சர்க்கரை சத்து உள்ள இப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது.
 அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் எளிதாக வளரும் சீதாமரம், சிறு மர வகையை சேர்ந்தது. தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்ட இப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்தும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது - நீர்ச்சத்து அதிகமுள்ள சீதாப்பழத்தில் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து , சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவை அடங்கியுள்ளன.
 இப்பழத்தை சாப்பிடுபவர்களுக்கு செரிமானம் ஏற்பட்டு மலச்சிக்கல் நீங்கும். இலைகளை அரைத்து புண்கள் மீது பூசி வந்தால் விரைவில் புண்கள் ஆறும். குழந்தைகளுக்கு இப்பழத்தை சாப்பிட கொடுத்தால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும். சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படுவதுடன் காசநோய் மட்டுப்படும். குளிர் மற்றும் காய்ச்சலையும் கட்டுப்படுத்தும்.
 சீதாப்பழ விதைகளை காய வைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். சிறிதளவு வெந்தயம், சிறு பயறு ஆகிய இரண்டையும் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து பின்னர் காலையில் சேர்த்து அரைத்து, இதனுடன் சிறிதளவு சீதாப்பழ விதைப் பொடியை கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் தலை நன்கு குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. மேலும் பொடுகு தொல்லையும் நீங்கும். சீயக்காய் அரைக்கும்போது சிறிதளவு சீதாப்பழ விதைகளையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பேன் தொல்லை ஒழியும்.
 - நாகை சத்யா பாபு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com