வாழும் ஊக்க சக்தியாக விளங்குபவர்கள்!

தினமணி மகளிர்மணி சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, நட்சத்திர சாதனையாளர் 2019 விருது வழங்கும் விழா சென்னையில் மார்ச் 8 -ஆம் தேதி, கலைவானர் அரங்கில் நடைபெற்றது.
வாழும் ஊக்க சக்தியாக விளங்குபவர்கள்!

தினமணி மகளிர்மணி சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, நட்சத்திர சாதனையாளர் 2019 விருது வழங்கும் விழா சென்னையில் மார்ச் 8 -ஆம் தேதி, கலைவானர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்:
 "இந்த மேடையிலேயே விருது பெற்ற ஒன்பது பழம்பெரும் நடிகைகளும் கடந்த 1950 முதல் 1970-ஆம் ஆண்டுகள் வரையில் தங்களது அளப்பரிய நடிப்புத் திறத்தால் சினிமா ரசிகர்களை கட்டிப் போட்டவர்கள்.
 சினிமாவின் பொற்காலமாகக் கருதப்பட்ட அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், பிரேம் நசீர் போன்ற புகழ்பெற்ற ஆண் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர். சர்வதேச பெண்கள் தினத்தில் அவர்கள் மற்றவர்களுக்கு வாழும் ஊக்க சக்தியாக விளங்குவதுடன், நீடூழி பல ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.
 இந்த விழாவின் மூலமாக, ஆண்களுக்கு நிகராக பெண்களும் பொது விவகாரங்கள் உள்பட அனைத்துத் துறைகளிலும் சரிசமமாகவும், குறிப்பிடத்தக்க அளவிலும் உயர வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது.''
 - (ஆளுநர் பேசியதிலிருந்து ஒரு பகுதி)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com