பாப்கார்னின் நன்மைகள் !

தியேட்டர்களில் படம் பார்க்கும் போதுதான் பெரும்பாலும் பாப்கார்னை அதிகமாக வாங்கிச் சாப்பிடுவோம். சிலர் பேருந்தில் பயணம் செய்யும்போது வாங்கிச் சாப்பிடுவார்கள்.
பாப்கார்னின் நன்மைகள் !

தியேட்டர்களில் படம் பார்க்கும் போதுதான் பெரும்பாலும் பாப்கார்னை அதிகமாக வாங்கிச் சாப்பிடுவோம். சிலர் பேருந்தில் பயணம் செய்யும்போது வாங்கிச் சாப்பிடுவார்கள். இவ்வாறு பொழுதுபோக்கிற்காகச் சாப்பிடும் பாப்கார்னில் பல மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளன என சொன்னால் நம்ப முடிகிறதா ?
 பாப்கார்னில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் , மாங்கனீசு , நார்ச்சத்து, பாலிபீனாலிக் கூறுகள் மற்றும் மெக்னீசியம் அடங்கியுள்ளது. இதனால், பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அதைப் பற்றி இங்கு காண்போம்:
  பாப்கார்னின் தவிட்டில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடலில் இயக்கங்கள் சீராக இருக்கும். இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.
  ஒரு முழு தானியமான பாப்கார்ன் மூலம் கிடைக்கப்படும் நார்ச்சத்துகள் ரத்த குழாய்களிலும், தமனியிலும் படிந்திருக்கும் அதிக அளவு கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. எனவே, உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கப்படுகிறது.
  பாப்கார்ன் நாம் தினசரி பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவு ஆக்ஸிஜனேற்றியாகும்.
  புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை உண்டாக்கும் அடிப்படைக் கூறுகளை எதிர்த்து போராடுவதே இந்த ஆன்டி ஆக்ஸிடென்டின் முக்கியப் பணியாகும்.
  அதிக அளவில் நார்ச்சத்து உடலில் இருக்கும்போது, இது ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவின் வெளியீடு மற்றும் நிர்வாகத்தை சிறப்பாக இயக்குகிறது. எனவே, அனைவருக்கும் நார்ச்சத்து மிகுந்த உணவு அவசியமான ஒன்றாகும்.
  ஒரு கிண்ணம் பாப்கார்ன் 30 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது ஒரு சிறிய பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ûஸ காட்டிலும் 5 மடங்கு குறைவு.
  இதில் உள்ள நார்ச்சத்து நமது வயிற்றை எளிதில் நிரப்பி, பசியை தூண்டும் ஹார்மோனை சுரக்காமல் தடுக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கூட இதனை உட்கொள்ளலாம்.
 - ஏ.எஸ்.கோவிந்தராஜன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com