லிக்விட் சோப்பிலும் லாபம் பார்க்கலாம்! 45

கனரா வங்கியின் உலக மகளிர் தின விழா வெகு சிறப்பாக சென்னையில் நடைபெற்றது. அதில் பேப்பர் பேக், சிப்பி பொம்மைகள் தயாரிப்பு மற்றும் காளான் வளர்ப்பு என
லிக்விட் சோப்பிலும் லாபம் பார்க்கலாம்! 45

இல்லத்தரசிகளும் தொழில் முனைவோர் ஆகலாம்!
 கனரா வங்கியின் உலக மகளிர் தின விழா வெகு சிறப்பாக சென்னையில் நடைபெற்றது. அதில் பேப்பர் பேக், சிப்பி பொம்மைகள் தயாரிப்பு மற்றும் காளான் வளர்ப்பு என சிறு தொழில் பயிற்சியாளராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டேன். மிக மிக மகிழ்ச்சியான தருணம் அது. காரணம் 1997-ஆம் ஆண்டு சணல் பை தைக்க பயிற்சி பெற்று, உற்பத்தி செய்த பைகளை எப்படி விற்பது என நினைத்தபோது கனரா வங்கி "கேன் பஜார்' என தொடங்கிய மகளிருக்காக விற்பனை வாய்ப்புகளை தந்தனர். அதில் முதல் பெண்மணி நான்தான்.
 சிறிது காலத்திற்கு பிறகு நாலு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்படி கூறி அவர்களே லோனும் தந்தனர். நான்கு மிஷின்கள் வாங்கி நான்கு பேருக்கு வேலைவாய்ப்பும் தந்தேன். பிறகு இதுபோன்ற வாய்ப்பு நிறைய பேருக்கு போய்ச் சேர வேண்டும் என்று மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கும்படி கூறி என்னை பயிற்சியாளராக மாற்றியதும் அவர்கள்தான். அதன்பிறகு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூரைச் சேர்ந்த மகளிர்திட்டக் குழுக்கள், சென்னை மாநகராட்சி, வங்கிகள், என்.ஜிஓக்கள் என பல இடங்களிலும் பெண்களுக்கு பயிற்சி அளிக்க தொடங்கினேன்.
 பிறகு 2004-இல் "சுகா டிரஸ்ட்' என்ற அமைப்பை தொடங்கி அதன்மூலம் சுமார் 5000 பெண்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கினேன். இதற்காக 2017-ஆம் ஆண்டு சிறந்த தொழிற் பயிற்சியாளர் விருது எனக்கு கிடைத்தது. தற்போது வெளிநாடு வாழ் இந்திய பெண்களுக்கு இதுபோன்ற தொழிற் பயிற்சிகளை அளிக்கும் வாய்ப்புகள் வர அந்த முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன்.
 1997-இல் ஒரு பயிற்சியில் தொடங்கி இப்போது 55 வகையான பயிற்சிகளை அளித்து வருகிறேன். இவற்றையெல்லாம் மகளிர் தின விழா மேடையில் பேசிவிட்டு இறங்கி வர, ஒரு பெண்மணி என்னிடம் வந்தார்.

 "மேடம் தினமணியில் புதன்கிழமைதோறும் உங்களின் இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம் தொடரை படித்து அதை கட் செய்து பாதுகாத்து வைத்துள்ளேன். ஒரு சின்ன விஷயம் என்னால் உங்களைப்போன்று கண்காட்சியில் கலந்து கொள்ள முடியாது. வீடு வீடாக விற்பனை செய்யவும் எனக்கு அனுமதியில்லை. ஆனால் எதையாவது செய்து நான் சாதிக்க வேண்டும். எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்'' என்றார்.
 நீங்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உங்களை வீடு வீடாகவோ அல்லது கண்காட்சிகளில் கலந்து கொண்டோதான் விற்பனை செய்ய வேண்டும் என்று கூறவில்லை.
 முதலில் நீங்கள் ஒரு பொருளை தயாரிக்க கற்றுக் கொள்ளுங்கள். பின்னர், அதை உங்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துங்கள். உதாரணமாக, சோப்புத்தூள் துணி துவைக்க வாங்குகிறீர்கள் அது மாதத்திற்கு எவ்வளவு செலவு என கணக்கு போடுங்கள். அதற்கு பதில் நீங்கள் லிக்விட் சோப் தயாரிக்க கற்றுக் கொள்ளலாம்.
 லிக்விட் சோப் 8 லிட்டர் தயாரிக்க வெறும் 500 ரூபாய்தான் முதலீடு. லாபமோ இரண்டு மடங்கு. எனவே, உங்கள் வீட்டிற்கு தேவையானதை எடுத்துக் கொண்டு, மீதமுள்ளதை அக்கம்பக்கத்திலுள்ள தோழிகளுக்கு குறைந்த விலைக்கு விற்றால் கூட , நீங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுத்து விடலாம். ஆக வீட்டில் இருந்தபடியே இதுபோன்று செய்து பணத்தை சேமிக்கலாம். அதை வங்கியில் போடுங்கள். அல்லது எந்த வங்கியில் கணக்கு வைத்து இருக்கிறீர்களோ அவர்களையே விற்பனைக்கான வாய்ப்பு கேளுங்கள். படிப்படியாக நீங்கள் உங்கள் தயாரிப்பு பெருளை விரிவு படுத்தலாம்'' என்கிறார் சுயதொழில் பயிற்சியாளர் உமாராஜ்.
 சரி, இந்தவாரம் என்ன தொழில் செய்யலாம் என பார்க்கலாம். சென்ற வாரத்திற்கு முந்தைய வாரம் வேர்க்கடலையைப் பற்றியும் அதில் மதிப்பு கூட்டுப் பொருளாக என்ன தயாரிக்கலாம் என்பது பற்றியும் குறிப்பிட்டு இருந்தோம். இதை பார்த்துவிட்டு சிவகுமார் என்ற விவசாயி, தனது நிலத்தில் விளைந்த வேர்க்கடலையில் வேர்க்கடலை பர்பி, உருண்டை தயாரித்திருப்பதாகவும், பீனட் பட்டர் எவ்வாறு செய்வது என கேட்டிருந்தார்.
 அவருக்காக, சென்னையில் உள்ள மத்திய அரசு நடத்தும் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் பணிபுரியும் செஃப் அவர்களிடம் கேட்டேன். அவர் தந்த தகவல்:
 வேர்க்கடலை முதல் தரம் உள்ளது - 2 கிண்ணம். இதை உப்பு சேர்த்து வறுத்து தோல் நீக்க வேண்டும். பிறகு அதை பொடியாக அரைக்கவும். அதில் ஆவின் பட்டர் 1 தேக்கரண்டி சேர்க்கவும். பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும் இது ஒருமாதம் வரை கெடாது. தேவையெனில் சர்க்கரை 1 தேக்கரண்டி சேர்க்கலாம்.
 எனது மகள் ஹேமலதா சிறுதானிய உணவு பயிற்சியாளர் என்பதால் அவர் அளித்த குறிப்பு:
 வேர்க்கடலை தரமானது - 2 கிண்ணம்
 கடலை எண்ணெய் - 1 தேக்கரண்டி
 தேன் - 1 தேக்கரண்டி
 உப்பு - 1 சிட்டிகை
 வேர்க்கடலை வறுத்து தோல் நீக்கிய பின் மிக்ஸியில் பொடிக்கவும். பிறகு எண்ணெய், தேன், உப்பு சேர்த்து நைஸôக அடித்தால் பீனட் பட்டர் ரெடி.
 சென்னையில் இந்திய அரசால் கேட்டரிங் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த 6 நாள் பயிற்சிக்கு ரூ. 1,800 உதவித் தொகையும், இந்திய அரசின் சான்றிதழும் வழங்கப்படும். வகுப்பு பிற்பகல் 2.00 மணி முதல் 5 மணி வரை மட்டுமே. 19 வயது முதல் உள்ள ஆண், பெண் இருவருமே கலந்து கொள்ளலாம்.
 இதில் பலதரப்பட்ட உணவு வகைகளை 200, 300 பேருக்கு எவ்வாறு சமைப்பது என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. வெளியூரில் உள்ளவர்கள் கூட இதில் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் 9500148840, 9600807887 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 - ஸ்ரீ
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com