முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
தான் நடித்த படங்களை பார்க்காத நடிகை
By DIN | Published On : 15th May 2019 09:49 AM | Last Updated : 15th May 2019 09:49 AM | அ+அ அ- |

தமிழில் விஜய்சேதுபதி- த்ரிஷா நடித்து வெளியான "96' படத்தின் கன்னட ரீமேக்கான "99' என்று பெயரிடப்பட்ட படத்தில் த்ரிஷா பாத்திரத்தில் பாவனா நடித்துள்ளார். அண்மையில் வெளியான இந்தப் படம் பாவனாவின் 79-ஆவது படமாகும். "இதுவரை நான் நடித்த படங்கள் எதையுமே பார்த்ததில்லை. என்னுடைய நடிப்பை திரும்ப பார்க்கு மளவுக்கு தைரியம் இல்லை, ஏனென்றும் தெரியாது. இருந்தாலும் தென்னிந்திய நான்கு மொழிகளிலும் நடித்துள்ள எனக்குக் கிடைத்த பாத்திரங்கள் வித்தியாசமானவை. அவற்றை நிறைவாக செய்துள்ளதாக கருதுவதே போதுமென்று நினைக்கிறேன்'' என்கிறார் பாவனா.