முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
தினமும் சப்பாத்தி சாப்பிட்டால்!
By DIN | Published On : 15th May 2019 10:11 AM | Last Updated : 15th May 2019 10:11 AM | அ+அ அ- |

சப்பாத்தி இன்று பல வீடுகளில் கட்டாய இரவு உணவாக மாறியிருக்கிறது. திடீரென சப்பாத்திக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? அதன் மருத்துவ பலன் என்ன?
✦ நம் உடலுக்கு அதிமுக்கியத் தேவையான வைட்டமின் ஆ, உ, மினரல்கள், காப்பர், ஸிங்க், ஐயோடின், சிலிகான், பொட்டாசியம் மற்றும் கால்சியத்துடன், இதர மினரல் உப்புகள் கோதுமை மாவில் அடங்கியிருக்கின்றன.
✦ சப்பாத்தியில் உள்ள ஸிங்க் மற்றும் இதர மினரல் சத்துகள் சருமத்திற்குப் பளபளப்பை அளிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்போது தானே சருமமும் ஆரோக்கியம் பெறும்.
✦ கார்போ ஹைட்ரேட் முழு கோதுமையில் மொத்தமாக நிறைந்துள்ளது. இதனால் ஒரு நாள் முழுவதும் ஆற்றல் சக்தியை உடலுக்கு அளித்து சுறுசுறுப்பும் அளிக்கிறது. மூளையின் செயல்திறனும் அதிகரிக்கிறது.
✦ நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு போன்ற நாள்பட்ட வியாதிகளால் அவஸ்தைப்படுவோருக்கு சப்பாத்திதான் சிறந்த சரிவிகித உணவு. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதால் நோய்த் தொற்றுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.
✦ உடலுக்கு ஹீமோகுளோபினை அளிப்பது இரும்புச் சத்துதான். அது சப்பாத்தியில் அதிகமாக இருப்பதால் உடலுக்குத் தேவையான ஹீமோகுளோபின் அளவை குறையாதவாறுப் பராமரிக்கும்.
இது மற்ற உணவுகளோடு ஒப்பிடுகையில் கலோரி மிக மிகக் குறைவு. இதனால் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்போர் சப்பாத்தியை தினமும் உண்ணலாம். அதேபோன்று சப்பாத்தி உண்டால் நீண்ட நேரம் பசியும் எடுக்காது.
- பொ.பாலாஜி கணேஷ்