விரல்களில் அடிக்கடி நெட்டை எடுக்காதீங்க!!

மனித உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமாக விளங்கும் கைவிரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களையும், தனித்தனி செயல்பாடுகளுக்கு உதவும் வகையிலும் உள்ளது.
விரல்களில் அடிக்கடி நெட்டை எடுக்காதீங்க!!

மனித உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமாக விளங்கும் கைவிரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களையும், தனித்தனி செயல்பாடுகளுக்கு உதவும் வகையிலும் உள்ளது.
• இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விரல்களில் வீக்கம், வலி, காயம் போன்றவை ஏற்பட்டால், அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
• மேலும் உடலின் உட்பகுதியில் நிகழும் பாதிப்புகளுக்கும், விரல்களில் ஏற்படும் பாதிப்புக்கும் அதிக தொடர்பு உள்ளது.
• விரல்களுக்கு செல்லும் நரம்புகள், ரத்தக் குழாய்கள், எலும்புகள் மற்றும் தசைகள், போன்ற உறுப்புகளின் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறியாக கூட விரல்களில் வலியை ஏற்படுத்தும்.
விரல்களில் நெட்டை எடுக்கலாமா ?
• முதலில் விரல்களில் ஏற்படும் வலியை தடுக்க, விரல்களில் நெட்டை எடுப்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். அடிக்கடி விரல்களில் நெட்டை எடுப்பதால், விரல்களுக்கு செல்ல வேண்டிய நரம்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
• மேலும் நெட்டை எடுக்கும் நேரம் சுகமாக இருந்தாலும், அதன் பின் பக்கவாதம் ஏற்படும் அளவிற்கு, அது பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.
• விரல்களில் வலி ஏற்படும் போது, சிவப்பு நிறமாக மாறுவது, வியர்வை ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
• கை விரல்களை அதிகமாக பயன்படுத்தும் பணியில் ஈடுபட்டால், கை விரல்களுக்கான பயிற்சிகளை செய்து, விரல்களுக்கு கண்டிப்பாக ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லையெனில், விரல்கள் முழுமையாக சோர்வடைந்து, அது நரம்பு மண்டலத்தை தாக்கி, அதிக வலியை ஏற்படுத்தும். அதனால், விரல்களுக்கான சிறு சிறு பயிற்சிகளை முன்னெச்சரிக்கையாக செய்து கொள்வது மிகவும் நல்லது. 
- ஏ.எஸ். கோவிந்தராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com