ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தொடரில் ஷபனா ஆஷ்மி

1974-ஆம் ஆண்டு "அங்கூர்' படத்தின் மூலம் அறிமுகமான ஷபனா ஆஷ்மி, கலைப் படங்களில் மட்டுமின்றி, அதற்கிணையாக வர்த்தக படங்களிலும் நடித்து ஐந்து தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண்
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தொடரில் ஷபனா ஆஷ்மி


1974-ஆம் ஆண்டு "அங்கூர்' படத்தின் மூலம் அறிமுகமான ஷபனா ஆஷ்மி, கலைப் படங்களில் மட்டுமின்றி, அதற்கிணையாக வர்த்தக படங்களிலும் நடித்து ஐந்து தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் என பல விருதுகளைப் பெற்றதுடன், ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் வகித்துள்ளார்.

தற்போது 67 வயதாகும் ஷபனா ஆஷ்மி, அமெரிக்க இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்கின் "ஹாலோ' என்ற தொடரில் கடற்படை அட்மிரல் மார்க்கெட் பரான்கோஸ்கி என்ற பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

""திறமையும் கண்டிப்பும் உள்ள அட்மிரல் பாத்திரத்தை ஏற்றபோது எனக்குள் ஆர்வமும், பயமும் தோன்றினாலும், ஆசியாவை சேர்ந்த ஒரு நடிகைக்கு இந்த கௌரவத்தை அளித்திருப்பது பெருமையாக இருக்கிறது'' என்கிறார் ஷபனா ஆஷ்மி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com