பொடுகு தொல்லை நீங்க..

கரிசளாங்கன்னி கீரை, முட்டையின் வெள்ளைக் கரு, எலுமிச்சைச் சாறு, தயிர், துளசி, வேப்பிலை, தேயிலை நீர் இவற்றை பேக் போட்டால் பொடுகுத் தொல்லை நீங்கி கூந்தல் நன்றாக வளரும்.
பொடுகு தொல்லை நீங்க..

• தேங்காய்ப்பால் அரை கப், எலுமிச்சைச் சாறு 4 தேக்கரண்டி மற்றும் ஊற வைத்து அரைத்த வெந்தயம் இம் மூன்றையும் கலந்து தேய்த்து தலைக்கு குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். மேலும் கூந்தலின் நுனி வெடிக்காமல் இருக்கும்.
• கரிசளாங்கன்னி கீரை, முட்டையின் வெள்ளைக் கரு, எலுமிச்சைச் சாறு, தயிர், துளசி, வேப்பிலை, தேயிலை நீர் இவற்றை பேக் போட்டால் பொடுகுத் தொல்லை நீங்கி கூந்தல் நன்றாக வளரும்.
• ஒரு கப் ஆப்பிள் சாறுடன் அரை கப் தண்ணீர் கலந்து தலைமுழுவதும் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும்.
• சிறிது மிளகு, எண்ணெய், தயிர், செம்பருத்தி பூ இவற்றைக் கொண்டு மசாஜ் செய்தாலும் பொடுகுத் தொல்லை நீங்கும்.
• வசம்பை தட்டி சிறிது நல்லெண்ணெய்யில் நன்றாக கருக வறுத்து அதைத் தேங்காய் எண்ணெய்யில் கலந்து பூசி வர பொடுகுத் தொல்லை நீங்கும்.
• முல்தானி மட்டி, மருதாணி, முட்டையின் வெள்ளைக் கரு மூன்றையும் கலந்து தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால் பொடுகு நீங்கும்.
• தலையில் தயிர் தடவி அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு பிறகு குளிக்க, பொடுகு நீங்கும்.
• பொடுகுத் தொல்லையை கவனிக்க நேரம் இல்லையே என வருந்துபவர்கள் குளிக்க வைக்கும் வெந்நீரில் வேப்பிலையைப் போட்டு கொதிக்க வைத்து குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. 
• வசம்பு சாறு, பொடுதலைச் சாறு இரண்டையும் கலந்து இரவில் பூசி காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். பொடுதலையை பொடுகுள்ள தலைக்கு உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
• நாட்டு வெங்காயத்தை உரித்து அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து குளித்தால் பொடுகு நீங்கும்.
• வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி. வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாதப் பசும்பாலில் அரைத்து தலைக்கு பேக் போட்டு அரைமணி நேரம் ஊற வைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
• தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தைப் போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும்.
• பசலைக்கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.
"அழகு குறிப்புகள்' என்ற நூலிலிருந்து
- சி.பன்னீர் செல்வம், செங்கல்பட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com