பதினாறு வயதில் பெண் விமான பைலட்!

பதினாறு வயதில் சைக்கிள் ஓட்டலாம். எரிபொருளில் இயங்கும் பைக், ஸ்கூட்டர், கார் ஓட்ட வேண்டுமென்றால் 18 வயது பூர்த்தியாக வேண்டும். ஆனால் பதினாறு வயதில் ஆயிஷா அஜிஸ் விமான பைலட் லைசன்ஸ் பெற்றுள்ளார்
பதினாறு வயதில் பெண் விமான பைலட்!

பதினாறு வயதில் சைக்கிள் ஓட்டலாம். எரிபொருளில் இயங்கும் பைக், ஸ்கூட்டர், கார் ஓட்ட வேண்டுமென்றால் 18 வயது பூர்த்தியாக வேண்டும். ஆனால் பதினாறு வயதில் ஆயிஷா அஜிஸ் விமான பைலட் லைசன்ஸ் பெற்றுள்ளார். இப்போது 23 வயதாகும் ஆயிஷா விமான பைலட்டாகப் பணிபுரிகிறார். இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் பைலட் ஆகி இளம் பெண்களுக்கு முன்மாதிரியாகவும் ஆயிஷா அஜிஸ் மாறியுள்ளார்.
 மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் நான் காஷ்மீரைச் சேர்ந்தவள். வருடத்தில் இரண்டு தடவை காஷ்மீருக்குப் போய் வருவோம். விமானத்தில்தான் பயணிப்போம். அதனால் விமானப் பைலட்டாக வேண்டும் என்பது லட்சியமானது. விமானம் தரையை விட்டு மேலே எழும்புவதையும், விமானம் தரையைத் தொடுவதையும் வெகுவாக ரசிப்பேன். விமானப் பயணத்தின் போது நான் தூங்க மாட்டேன்... விமானத்துடன் சேர்ந்து என் மனமும் பறக்கும்... பயிற்சியின் போது பயிற்சியின் ஒரு பாகமாக அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்குச் சென்று வந்தேன். அங்கே இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ûஸயும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நாசாவில் பிரபல விண்வெளி வீரரும் சிறந்த பைலட்டுமான ஜான் மக்பிரைட் சந்திப்பும் கிடைத்தது.
 நாஸாவில் அவர்களது ஆய்வுக் கூடத்தில், சந்திரனில் நடக்கும் அனுபவம் கிடைப்பது போன்ற அமைப்புகள் உள்ளன. அதில் நானும் நடந்து மிதந்தேன். பள்ளிப் படிப்பு முடித்தவுடன் விமானப் பைலட் பயிற்சியில் சேர்ந்தேன்.
 2013 -இல் மாணவப் பைலட் லைசன்ஸ் கிடைத்தது. அப்போது எனக்கு பதினாறு வயது. பணச் சிக்கல் காரணமாக பயணிகள் விமானத்தை இயக்கும் பைலட் லைசன்ஸ் வாங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது. தவிர பயணிகள் விமானம் ஓட்டும் லைசன்ஸ் பெற பதினேழு வயது நிறைவாகியிருக்க வேண்டும். விமானம் ஓட்ட பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது "விமானம் இயக்கம்' குறித்த பட்டப்படிப்பும் படித்து வந்தேன். இருபது வயதில் விமானி ஆனேன். இப்போது விமானம் ஓட்டுவதில் மூன்றாண்டுகள் அனுபவம் உள்ளது. போர் விமானத்தை இயக்க வேண்டும் என்பது இப்போதைய லட்சியம்.." என்கிறார் ஆயிஷா அஜிஸ்.
 - பனுஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com