54 வயதில் சைக்கிள் ஓட்டத்தில் சாதனை..!

சென்ற மாதம் பாரிஸ் நகரத்தில் "Paris - Brest - Paris' சைக்கிள் ஓட்டம் நடைபெற்றது. இந்த ஓட்டம் 1891-லிருந்து பாரிஸ் நகரத்தில் நடைபெற்று வருகிறது.
54 வயதில் சைக்கிள் ஓட்டத்தில் சாதனை..!

சென்ற மாதம் பாரிஸ் நகரத்தில் "Paris - Brest - Paris' சைக்கிள் ஓட்டம் நடைபெற்றது. இந்த ஓட்டம் 1891-லிருந்து பாரிஸ் நகரத்தில் நடைபெற்று வருகிறது. பாரிஸிலிருந்து ப்ரெஸ்ட் நகரத்திற்கு சைக்கிள் ஓட்டிச் சென்று மீண்டும் பாரிஸ் திரும்ப வேண்டும். மொத்த தூரம் போக வர சேர்த்து 1200 கி.மீ. இந்த தூரத்தை 90 மணி நேரத்தில் ஓய்வு ஏதும் எடுக்காமல் கடக்க வேண்டும். 
இந்த ஓட்டத்தில் இந்தியாவிலிருந்து பல பெண்கள் 2011-ஆம் ஆண்டிலிருந்து கலந்து கொண்டிருந்தாலும், யாரும் இறுதிச் சுற்றுவரை சைக்கிள் ஓட்டியதில்லை. நடுவில் விலகிக் கொள்வார்கள். உடல் ஆற்றலுக்கு ஒரு சோதனையாக அமைந்துள்ளது இந்த சைக்கிள் ஓட்டம். ஆனால் இந்த ஆண்டு நடந்த போட்டியில், இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட இருபது பெண்களில் மூன்று பெண்கள் இறுதிச் சுற்று வரை சைக்கிள் ஓட்டி முடித்திருக்கின்றனர். அதில் ஐம்பத்தி நான்கு வயதான, இரண்டு குழந்தைகளுக்குப் பாட்டியுமான ரேணு சிங் ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்திருப்பது அனைவரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.
பிராச்சி க்ஷிர்சாகர் 91 மணி நேரத்தில் ஓட்டத்தை முடிக்க, ரேணு 92 மணி நேரத்தில் முடித்திருக்கிறார். 93 மணி நேரத்தில் ஓட்டத்தை பிரியதர்ஷினி பவார் முடித்திருக்கிறார். பிராச்சியும், ப்ரியதர்ஷினியும் முப்பதுகளில் நிற்பவர்கள். ரேணு ஐம்பத்தைக் கடந்தவர். 
இதுகுறித்து ரேணு கூறுகையில், "" நான் 2011-இல் தான் அதிக தூர சைக்கிள் ஓட்டத் தொடங்கினேன். உடலை கட்டாக வைத்திருக்க உடல் பயிற்சி நிலையத்திற்குப் போக நான் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக சைக்கிள் ஓட்டினேன். சைக்கிள் கிளப்களில் உறுப்பினர் ஆனேன். அப்படி ராஜஸ்தான் முழுவதும் சைக்கிளில் சுற்றி வந்தேன். சைக்கிளில் அதிக தூர பயணத்தின் போது பாரிசில் தொலைதூர சைக்கிள் ஓட்டம் நடப்பதை அறிந்தேன். தகுதி ஓட்டத்தில் தேர்வு பெற்று கலந்து கொண்டேன். இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ள இரண்டு லட்சம் செலவானது. எனது அடுத்த லட்சியம் லண்டன்-எடின்பர்க்-லண்டன் சைக்கிள் ஓட்டம். தூரம் 1450 கி.மீ'' என்கிறார் ரேணு சிங். 
- ஏ. எ. வல்லபி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com