காலத்திற்கேற்ற காதி ஆடைகள்!

இந்தியாவின் தேசிய ஆடையான காதி, நம் நாட்டின் பாரம்பரிய கைத்தொழிலாகும். இந்த நெசவுத் தொழில் இன்று காலத்திற்கேற்ப வளர்ச்சிப் பெற்று தரத்துடன் விதவிதமான வண்ண டிசைன்களுடன்
காலத்திற்கேற்ற காதி ஆடைகள்!

இந்தியாவின் தேசிய ஆடையான காதி, நம் நாட்டின் பாரம்பரிய கைத்தொழிலாகும். இந்த நெசவுத் தொழில் இன்று காலத்திற்கேற்ப வளர்ச்சிப் பெற்று தரத்துடன் விதவிதமான வண்ண டிசைன்களுடன் உருவாக்கப்பட்டு அணிபவர்களுக்கு நிறைவை தந்து வருகிறது.
 இந்தியா சுதந்திரமடைவதற்கு முன் காதி அரசியல்வாதிகளுக்கும், கிராம மக்களுக்கும் தான் பொருந்தும் என்ற கருத்து நிலவிவந்தது. இப்போது நாகரீகமான உடை அணிபவர்களின் விருப்பத்திற்கேற்ப காதி உடைகள் தயாரிக்கப்படுகின்றன. துவக்கத்தில் காதி ஆடை அணிவது சௌகரியமாகவும், எடுப்பாகவும் இருப்பதாக கருதி தேர்ந்தெடுத்தனர்.
 இன்றைய தலைமுறையினர் உடைகளைத் தேர்வு செய்யும்போது காதிக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர். கோடை காலத்தில் பருத்தி ஆடைகளை அணிவதற்கு பதிலாக காதியை அணிய விரும்புகின்றனர். தொடக்கத்தில் சற்று கடினமாக நெய்யப்பட்ட பருத்தி காதி ஆடைகள் மட்டும் கிடைத்து வந்தன. இப்போது காதி சில்க், காதி உல் என மெல்லியதாக நெய்யப்பட்ட விதவிதமான ஆடைகள் கிடைக்கின்றன. திருமண ஆடைகள், டாப்ஸ், பாட்டம்ஸ், குர்தா, துப்பட்டா, சேலைகள் என பலவித டிசைன்களில் காதி உடைகள் தயாரிக்கப்படுகின்றன. கோடையில் வெப்பத்தை தணிப்பதற்கு மட்டுமின்றி, குளிர்காலத்திலும் வெதுவெதுப்பை தரக்கூடிய காதி ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
 காதி எம்ப்ராய்டரிகுர்தா: கோடை மற்றும் மழைகாலத்திற்கேற்ப காதியில் நெய்யப்பட்ட குர்தா, பார்ப்பவர்களை கவரும் வகையில் ஓரங்களில் அழகான வேலைப்பாடுடன் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது.
 காதி எம்ராய்டரி சேலை: ஆண்டு முழுவதும் அணிவதற்கேற்ப இயற்கையான துணியில் உருவாக்கப்பட்டது. பல ரகங்களில் பிரிண்டட் மற்றும் எம்ப்ராய்டரி காதி சேலைகள் அணியும்போது, குறைவான நகைகள் அணிந்தால் பார்ப்பவர்களுக்கு எடுப்பாக தெரியும், சாதாரண வண்ண சேலைகளும் எம்ப்ராய்டரி செய்யப்பட்டு ரவிக்கையுடன் கிடைக்கின்றன.
 பிரிண்டட் காதி குர்தா: எல்லா பருவத்துக்கும் ஏற்ப பிரகாசத்துடன் கூடிய இந்த குர்தாவை பெண்கள் வேலைக்கு செல்லும் போதோ, பார்ட்டிகளுக்கு செல்லும்போதோ அணிவதற்கு ஏற்றது. கீழ் பகுதியில் அணிவதற்கேற்ற காதி பேண்ட் நவீன டிசைன்களில் கிடைக்கிறது.
 ப்ரண்ட் ப்ளீட்டெட் ஸ்கர்ட்: வழக்கமாக அணியும் உடைக்கு மாற்று உடைதான் காதியில் தயாரிக்கப்படும் ப்ரண்ட் ப்ளீட்டெட் ஸ்கர்ட். மாறுதலுக்காக இதை அணியும்போது உங்களுக்கு இது ஒரு புது அனுபவமாக தோன்றும். இதற்கேற்ற சட்டையும் கிடைப்பதால் வெளியில் செல்லும்போதோ, வேலைக்கு போகும்போதோ அணிவது சௌகரியமாக இருக்கும்.
 - அ.குமார்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com