மாணவியின் குழந்தையை முதுகில் சுமந்த பேராசிரியை!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள கிக்வினட் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனது குழந்தையோடு கல்லூரிக்கு வந்திருக்கிறார்
மாணவியின் குழந்தையை முதுகில் சுமந்த பேராசிரியை!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள கிக்வினட் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனது குழந்தையோடு கல்லூரிக்கு வந்திருக்கிறார். அப்போது பேராசிரியர் ரமதா சிசாகோ சிஸ்ஸே பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் குழந்தையுடன் வந்த மாணவி பாடத்தை முழுமையாக கவனிக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். ஏனெனில் குழந்தையை வைத்துக் கொள்ளும் பேபிசிட்டரை அவர் தொலைத்துவிட்டார்.
 இதனால் பாடத்தை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த பேராசிரியர் சிஸ்ஸே, குழந்தையை வாங்கி பாதுகாப்பாக ஒரு துணியால் தன் முதுகில் கட்டிக் கொண்டார். பின்னர் குழந்தையை சுமந்தபடி தொடர்ந்து 3 மணி நேரம் வகுப்பறையில் பாடம் நடத்தியிருக்கிறார்.
 பேராசிரியர் சிஸ்ஸே நாள் முழுவதும் பாடம் நடத்தும் போது குழந்தையை வைத்திருந்த போதும், ஒரு முறை கூட குழந்தையை அவர் அழவிடல்லை. உடனுக்குடன் பாட்டில் பாலை கொடுத்து அழவிடாமல் பார்த்துக்கொண்டாராம்.
 தன் குழந்தையின் மீதும் தன்னுடைய படிப்பின் மீது பேராசிரியர் காட்டிய அன்பை கண்டு வியந்து போன அந்த மாணவி. அத்துடன் அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பலரும் பேராசிரியரின் அன்பை கண்டு நெகிழ்ந்தனர். இந்நிலையில் குழந்தையுடன் பாடம் நடத்தியதை டுவிட்டரில் பேராசிரியர் ரமதா சிசாகோ சிஸ்ஸேவின் மகள் பகிர்ந்ததோடு, ""என் தாய் எனக்கு ரோல் மாடல்'' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
 இதை கேட்டும் புகைப்படத்தை பார்த்தும் வியந்து போன நெட்டிசன்கள் இப்படி ஒரு பேராசிரியரா என வியந்து பாராட்டியதோடு தங்களது வலைதள பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளனர். இதன் காரணமாக இப்படத்திற்கு 67000 லைக்குகளும், 11 ஆயிரம் ரீடுவிட்களும் கிடைத்து ஒரே நாளில் பிரபலமாகியுள்ளார் பேராசிரியை ரமதா சிசாகோ சிஸ்ஸே.
 - ஸ்ரீ
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com