புதிய உலக சாதனை!

சாதிப்பதற்கு என்றுமே வயது தடையில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் உலக குத்துச்சண்டை சாம்பியனான மேரி கோம்.
புதிய உலக சாதனை!

சாதிப்பதற்கு என்றுமே வயது தடையில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் உலக குத்துச்சண்டை சாம்பியனான மேரி கோம்.
 தனது அபார ஆட்டத் திறனுக்காக "மேக்னிபிஷியன்ட் மேரி' என குத்துச்சண்டை உலகில் அழைக்கப்படும் மேரி கோம் மணிப்பூரில் கடந்த 1.3.1983-இல் பிறந்தவர்.
 ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், பள்ளியில் பயின்ற போது அனைத்து விளையாட்டுகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த 1998-இல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் மணிப்பூரைச் சேர்ந்த டிங்கோ சிங் குத்துச்சண்டையில் தங்கம் வென்றிருந்தார். இதனால் உந்தப்பட்ட மேரி குத்துச்சண்டைக்கு மாறினார். மாநில அளவில் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
 திருமணமாகியும் தொடர்ந்த பயிற்சி:
 தொடர்ந்து திருமணமாகி 2 குழந்தைகளைப் பெற்ற பின்னரும் ஆர்வத்துடன் பயிற்சியைத் தொடர்ந்த மேரி கோமுக்கு அதன்பின் தொடர் வெற்றி பயணமாக அமைந்தது.
 2001-இல் வெள்ளியும், அதன்பின் 2002, 2005, 2006, 2008, 2010, 2018 உலகப் போட்டிகளில் 6 தங்கப் பதக்கத்துடன் சாம்பியன் பட்டத்தை வென்றார். 2012 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார்.
 இந்நிலையில் ரஷியாவின் உலன் உடே நகரில் தற்போது நடந்து வரும் உலக சாம்பியன் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்துள்ள மேரி கோம் 8-ஆவது முறையாக பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார். அரையிறுதிக்கு தகுதி பெற்றதாலேயே வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் மேரி. இதன்மூலம் இதற்கு முன்பு கியூபா வீராங்கனை பெலிக்ஸ் சாவோனின் 7 பதக்க சாதனையை
 முறியடித்துள்ளார்.
 - பா.சுஜித்குமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com