முகப் பருக்கள் மறைய...

சிறிது சீரகத்தைப் பால்விட்டு விழுதாக அரைத்து முகப்பருக்களின் மீது தடவிச் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு கழுவிச் சுத்தம் செய்து வந்தால் நாளடைவில் முகப்பருக்கள் மறைந்துவிடும்.
முகப் பருக்கள் மறைய...

* சிறிது சீரகத்தைப் பால்விட்டு விழுதாக அரைத்து முகப்பருக்களின் மீது தடவிச் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு கழுவிச் சுத்தம் செய்து வந்தால் நாளடைவில் முகப்பருக்கள் மறைந்துவிடும்.
* பூண்டு பற்கள் ஐந்து எடுத்துக் கொண்டு அவற்றின் தோலை நீக்கி விட்டு அத்துடன் பத்துமிளகு, ஒரு கைப்பிடியளவு துத்தி இலை, ஆகியவற்றையும் சேர்த்து அரைத்து பிறகு அதை வானலியில் இட்டு சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். 
பின்னர், எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு முகப்பரு உள்ள இடங்களில் காலை, மாலை என இரண்டு முறை தடவி வந்தால் முகப்பருக்கள் விரைவில் மறையும்.
* 10 பூண்டு பற்களை தோலுரித்து, பாலில் வேக வைத்து பிறகு அதை விழுதாக அரைத்து பருக்களின் மீது தடவி வந்தால் பருக்கள் விரைவில் மறையும்.
* ஜாதிக்காய், மிளகு, சந்தனம் ஆகிய மூன்றையும் சம அளவில் சேர்த்து நன்றாகப் பசைப் போல் அரைத்து எடுத்து வைத்துக் கொண்டு, இரவில் படுக்கப் போகும் முன் முகத்தில் தேய்த்திருந்து விட்டு காலையில் எழுந்ததும் கழுவி விடலாம். இப்படி செய்து வர, ஓரிரு மாதத்திற்குள் பருக்கள் சுத்தமாக மறைந்துவிடும்
* கறிவேப்பிலைக் கொழுந்தை பசைப் போல் அரைத்தெடுத்து அதில் சிறிதளவு தயிரைக் கலந்து காலை நேரத்தில் தொடர்ந்து பருக்களின் மீது தடவி வர, முகப்பருக்கள் மறையும்.
* நாமக்கட்டியை தண்ணீரில் குழைத்துப் பருக்களின் மீது தினமும் தடவி வர , விரைவில் முகப்பருக்கள் மறைந்துவிடும்.
* முருங்கை இலைச் சாற்றில், சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து பருக்களின் மீது தினமும் தடவி வந்தால், முகப்பருக்கள் மறையும்.
பெண்களுக்குப் பயனுள்ள பல்வேறு குறிப்புகள் எனும் நூலிலிருந்து
-முக்கிமலை நஞ்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com