ஒரு ரூபாய் இட்லி பாட்டி!

கோவை மாவட்டம் வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி. 85 வயதான இவர், அப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
ஒரு ரூபாய் இட்லி பாட்டி!

கோவை மாவட்டம் வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி. 85 வயதான இவர், அப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். ஆரம்பகாலத்தில் 25 பைசாவுக்கு இட்லி விற்கத் தொடங்கியவர், கடந்த 10 வருடத்துக்கு முன்பு இட்லியின் விலையை ஒரு ரூபாயாக உயர்த்தியுள்ளார். பிறகு இன்றளவிலும் விலையை மாற்றாமல் அதே ஒரு ரூபாய் விலையில் இட்லி விற்று வருகிறார். மேலும், இந்தக் கால மாற்றத்திலும் ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மியில் சட்னி அரைத்து பாரம்பரியமாக உணவு சமைப்பதினால் அந்தப் பகுதியில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றால் அவ்வளவு பிரபலம். 

இது குறித்து கமலாத்தாள் பாட்டி கூறுகையில், "30 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவரை இழந்தபோது, எனது வருமானத்திற்காக இந்த இட்லி கடையைத் தொடங்கினேன். தினமும் காலை 5:30 மணிக்கு எழுந்து சட்னி சாம்பார் செய்வேன். 6 மணிக்கு இட்லி அடுப்பை பத்தவைப்பேன். 12 மணி வரைக்கும் இட்லி ஊத்துவேன். தற்போதுள்ள விலைவாசி ஏற்றத்தினால் அரிசி, பருப்பு, தேங்காய், கடலை, எண்ணெய் என ஒரு நாளைக்கு 300 ரூபாய் செலவு ஆகிறது. 200 ரூபாய் லாபம் கிடைக்கும் அவ்வளவுதான். வருமானம் குறைவாகவே உள்ளதால், இதுவரை உதவிக்கு யாரையும் வைத்துக் கொள்ளாமல் தனியாளாகத்தான் கடையை நடத்தி வருகிறேன். பெரிய லாபம் கிடைக்கவில்லையென்றாலும், என்னை தேடி வந்து இட்லி வாங்கி சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்காக, சாகும் வரை ஒரு ரூபாய்க்கு தான் இட்லி விற்பேன். யார் சொன்னாலும் விலையை ஏற்ற மாட்டேன்'' என்கிறார் கமலாத்தாள் பாட்டி. 
- ஸ்ரீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com