சமையல் அறை சுத்தமாக இருக்க...!

எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைத்து பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்த்தால் கறை மறையும்.  
சமையல் அறை சுத்தமாக இருக்க...!

• குப்பைக் கூடையில் இருந்து கிளம்பும் நாற்றத்தைத் தடுக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைக் கொட்டி, கூடைக்குப் பக்கத்திலேயே வைத்தால் எந்த நாற்றமும் வராது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்றிக் கொள்ளலாம்.
• பாத்திரத்தை துலக்கப் பயன்படுத்தும் ஸ்பாஞ்சில் கிருமிகள் அதிகமாக இருக்கும். அதன் ஒரு சதுர இஞ்ச் பரப்பிலேயே லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் குடியிருக்கும். ஸ்பாஞ்சில் உள்ள ஈரப்பதத்தால் அதை சுத்தம் இல்லாமல் அடிக்கடி ஒரே ஸ்பாஞ்சை உபயோகித்தால் நாம் கைகளில் பாக்டீரியாக்கள் படிந்து வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை உருவாக்கும். இதைத் தவிர்க்க வாரம் ஒருமுறை இந்த ஸ்பாஞ்ச் மாற்றிவிட வேண்டும். அல்லது ப்ளீச்சிங் பவுடர் கலந்த வெந் நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து அலசி எடுத்தால், கிருமிகள் அழிந்துவிடும். கழுவியப் பாத்திரங்களை, வெயிலில் காய வைத்து உடனுக்குடன் துடைத்து வைத்தால், தேவை இல்லாத துர்நாற்றத்தையும் தடுக்க முடியும்.
• அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய்ப் பிசுக்கு ஒட்டி இருந்தால், டைல்ஸை சாதாரண துணியால் துடைத்த பின் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்தால் பளிச்சென்று மின்னும்.
• எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைத்து பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்த்தால் கறை மறையும். 
• கேஸ் அடுப்பில் எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க அடுப்பிலும் சமையல் மேடையிலும் திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து ஊறவிட வேண்டும். அதன் பின் தண்ணீர் ஊற்றி சுத்தமாகத் துடைத்தால், அடுப்பும், அடுப்பு வைத்துள்ள மேடையும் எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமல் இருக்கும்.
• இரண்டு லிட்டர் அளவுத் தண்ணீரில் அரை கப் வினிகர், கால் கப் பேக்கிங் சோடாவைக் கலந்து சமையல் அறைத் தரையைத் துடைத்து வந்தால் தரை சுத்தமாக இருக்கும்.
• கண்ணாடி பாட்டிலில் இருந்து வீசும் துர்நாற்றம் போக்க, பாட்டிலில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை அளவு கடுகு அல்லது சோடா உப்பு போட்டுக் குலுக்கி ஊற வைத்துக் கழுவினால் வாடை அகன்றுவிடும். உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டுவைத்தால், உப்பு நீர்த்துப்போகாமல் இருக்கும்.
• சமைக்கும் பொருளின் அமிலத்தன்மை, பயன்படுத்தும் தண்ணீர், தரம் குறைந்த அலுமினிய பாத்திரம் போன்றவற்றால் குக்கரின் உட்புறம் எளிதில் நிறம் மாறி விடும். எனவே சமைத்த பிறகு குக்கரில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு புளி அல்லது நறுக்கிய எலுமிச்சைத் துண்டு ஒன்றைப் போட்டு குக்கரை கழுவி வந்தால் மீண்டும் பழைய பளபளப்பை அடையும். 
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com