ஆட்டோ ஓட்டும் சின்னத்திரை நடிகை! 

"எப்படியாவது கார் ஒன்று வாங்கிவிட வேண்டும்..' என்பது பலரது லட்சியமாக மாறிவிட்டது. இந்தக் கனவுக்கு பெண்களும் விதிவிலக்கல்ல. காரணம், ஆடம்பரப் பட்டியலிலிருந்த கார் இப்போது வாழ்க்கையின்
ஆட்டோ ஓட்டும் சின்னத்திரை நடிகை! 

"எப்படியாவது கார் ஒன்று வாங்கிவிட வேண்டும்..' என்பது பலரது லட்சியமாக மாறிவிட்டது. இந்தக் கனவுக்கு பெண்களும் விதிவிலக்கல்ல. காரணம், ஆடம்பரப் பட்டியலிலிருந்த கார் இப்போது வாழ்க்கையின் அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டதுதான்..! 
கார் சொந்தமாக வைத்திருப்பவர்கள் இன்னும் வசதியான, பெரிய, நல்ல பிராண்ட் காராக உயர்த்திக் கொள்ள விருப்பப்படும் போது மும்பை சின்னத்திரை நடிகை யஷாஸ்ரீ மஸுர்க்கர் சொந்தக் காரை ஒதுக்கிவிட்டு ஆட்டோ ஒன்றை வாங்கி ஒரு வருஷமாக ஒட்டிக் கொண்டிருக்கிறார். 
"வித்தியாசமாக இருக்கட்டுமே என்று ஆட்டோ வாங்கி ஓட்ட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தார்கள். ஆட்டோ டிரைவர்கள், அவர்கள் தொழிலுக்குப் புதிய போட்டியாகக் கருதினார்கள். "வழி' கேட்டால் சொல்ல மாட்டார்கள். போகப் போக எல்லாம் சரியாகிவிட்டது.
கார் என்னிடம் இருந்த போது காரை ஓட்ட ஓட்டுநர் தேவைப்பட்டார். அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். எனக்கு சரி வர கார் ஓட்டத் தெரியாது. ஆட்டோ என்றால் செலவும் குறைவு. நானே ஒட்டிக் கொள்ளவும் முடியும். அதனால்தான் காரிலிருந்து ஆட்டோவுக்கு மாறினேன். இந்த ஆட்டோவை நான் பணம் கொடுத்து வாங்கவில்லை. எனது டென்மார்க் நண்பர் இந்தியா வந்தபோது இந்தியாவைச் சுற்றி பார்க்க அவர் வாங்கியது. டென்மார்க் திரும்பும்போது எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டார். 
அக்கம் பக்கத்தவர் "என்ன இருந்தாலும் நீ நடிகை அல்லவா.. கார் ஓட்டுவதுதான் கெளரவம் ..' என்கிறார்கள். ஆரம்பத்தில் பெற்றோரும் அப்படித்தான் சொன்னார்கள். பின்னர் அவர்களுக்குப் புரிய வைத்து சம்மதிக்க வைத்தேன். 
உடன் நடிக்கும் நடிகை, நடிகர்கள் "யஷாஸ்ரீக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது' என்று கேலி செய்தார்கள். கேலி இன்றைக்கும் தொடருகிறது. என்னுடன் நான் வளர்க்கும் நாயும் பயணம் செய்யும். எனது ஆட்டோவில் பல வசதிகளை செய்து கொண்டிருக்கிறேன். மின் விசிறி... அலைபேசியை சார்ஜ் செய்ய பாயிண்ட் இப்படி பல.. 
ஆட்டோ ஓடும் போது ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் எப்படிப் சமாளிப்பது என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறேன். ரேடியோ ஜாக்கியாகவும் வேலை செய்யும் நான் வேலைக்காக ஆட்டோவில்தான் போய் வருகிறேன்'' என்கிறார் யஷாஸ்ரீ மர்க்கர்.
- பனுஜா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com