தற்கொலை தீர்வல்ல...

மன அழுத்தம், மது பழக்கம், ஆளுமைச் சிதைவு, குடும்ப பிரச்னைகள் போன்ற காரணங்களால் தற்கொலைகள் நிகழ்கின்றன.
தற்கொலை தீர்வல்ல...

மன அழுத்தம், மது பழக்கம், ஆளுமைச் சிதைவு, குடும்ப பிரச்னைகள் போன்ற காரணங்களால் தற்கொலைகள் நிகழ்கின்றன. நாட்டில் 30 சதவீதம் தற்கொலைகள் குடும்பப் பிரச்னைகளால் ஏற்படும் மன அழுத்தத்தால்தான் நிகழ்வதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தற்கொலைக்கான காரணங்கள்:

பெரும்பாலான தற்கொலைகள் நிகழ்வதற்கான முக்கியமான காரணம் குடும்பப் பிரச்னைகள் மற்றும் உறவுகளின் குளறுபடிகள் தான் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட பலரும் தங்களுடைய உடல் வேதனையும் மன அழுத்தத்தையும் தாங்க முடியாமல் சில நேரத்தில் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். 

வரவுக்கேற்ற செலவு செய்யாமல் கடன் வாங்கி தன்னை மட்டுமல்ல குடும்பத்தையே மன அழுத்தத்திற்கு கொண்டுவந்து அதனால் தற்கொலை நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.

மயக்கமருந்து, மதுபழக்கம், போதை பழக்கங்களால் ஏற்படக்கூடிய மன அழுத்தம் போன்றவைகளும் தற்கொலைக்கு ஒரு தூண்டுதலாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சமூக காரணங்களால் கூட சில தற்கொலைகள் நிகழ்வதாக கூறப்படுகின்றன. தோல்வி பயத்தால் நேரக்கூடிய தற்கொலைகளை ஊடகங்களில் பார்த்து அதன்மூலம் பாதிக்கப்பட்டும் சில  தற்கொலைகள் நிகழ்கின்றன.

குடும்பப் பிரச்னைகளால் ஏற்படும் தற்கொலைகளை தவிர்ப்பது  எப்படி?

வீடுகளில் உறவுகள் சிறப்பானதாக இருக்கும் படி செய்ய வேண்டும். குடும்பத்தில் உறவுகள் சரியாக இருந்தால் தான் சமுதாயம் நன்றாக இருக்கும்.
தற்கொலை செய்ய தூண்டுதல் உள்ளவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் அந்த எண்ணத்தை பகிர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அதைப் புரிந்து கொண்டு அவர்களிடம் நம்பிக்கையான முறையில் பேசினால் தற்கொலை நிகழாமல் தடுக்க அது ஒரு நல்ல முயற்சியாக அமையும்.

உயிர்க்கொல்லி நோய்களால் உடனடியாக ஏற்படும் தற்கொலைகளை தடுக்க "நோய் ஆதரவு சிகிச்சை' (ல்ஹப்ப்ண்ஹற்ண்ஸ்ங் ஸ்ரீஹழ்ங்) எல்லா ஊர்களிலும் துவங்க வேண்டும். அவர்களுக்கு தேவையான அன்பும் அரவணைப்பும் கொடுக்கும்போது நோயின் வேதனை குறைவதற்கும் தற்கொலை முடிவை எடுப்பது குறைவதற்கும் வாய்ப்புண்டு.

போதைப் பொருட்களால் கூட நிறைய உயிர்களை நாம் இழக்கிறோம். உறவுகளில் எங்கெல்லாம் இடைவெளி இருக்கிறதோ அங்கெல்லாம் இது போன்ற கெட்ட பழக்கவழக்கங்கள்  உறவுகளுக்கு உள்ளே வந்து பெரிய விரிசல்களை உண்டாக்கி விடுகின்றன. மனதின் உறவுகள் வலுவானதாகவும் பிரச்னைகள் வரும்போது ஆதரவாகவும் இருக்கும் போதும்  தற்கொலைகளை தடுக்கலாம்.

பொருளாதாரப் பிரச்னைகளால் ஏற்படக்கூடிய தற்கொலைகளை தடுக்க வரவுக்கேற்ற செலவு ஆடம்பர செலவுகளைக் குறைப்பதும் தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது மிக முக்கியமாகும்.

2018 - ஆம் ஆண்டு 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 9400 பேர் தற்கொலையால் உயிர் இழந்துள்ளார்கள். இதற்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுவது படிப்பு, பரீட்சை, காதல் அல்லது உடல் கவர்ச்சி போன்ற காரணங்கள்.

மேலும் அடுத்து உள்ள உறவுகளால் வேலையின்மை, வறுமை மற்றும் பாலியல் தொல்லைகள் போன்ற  காரணங்களாலும் இளையோர் தற்கொலை செய்வது புள்ளி விவரங்களில் நாம் காணலாம்.

மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்களை வளரவிடாமல் தடுக்க வழிமுறைகள்:

சிறுவயதிலிருந்தே தன்னம்பிக்கை தரக்கூடிய பெரிய தலைவர்களுடைய வாழ்க்கை வரலாறு கூறி தோல்வியும் வெற்றியும் வாழ்க்கையின் இரண்டு பக்கங்கள், முயற்சிதான் மிக முக்கியம் என்று உணர்த்த வேண்டும். மதிப்பெண்கள் முக்கியம் தான் ஆனால் அதுவே வாழ்க்கையல்ல வாழ்க்கைக்கான துருப்புச் சீட்டுதான் என்பதை அவர்கள் மனதில் ஆழப் பதிய வைக்க வேண்டும்.

மாணவர்கள் செல்போனில் தேவையற்ற விளையாட்டுகளிலோ சூதாட்டங்களிலோ ஈடுபட்டு அடிமையாகாமலும்  தேவையற்ற வலைதளங்களில் தங்கள் கவனத்தை சிதற விடுவதையும் பெற்றோர்அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

பெற்றோர்களுடைய ஆசைகளையும் கனவுகளையும் குழந்தைகளின் மீது திணிக்காமல் அதே நேரத்தில் அவர்களின் கனவுகளின் அல்லது ஆசைகளின் நன்மை தீமைகளை கலந்து ஆலோசித்து நல்ல முடிவுகளை அவர்களே எடுக்கும்படி செய்ய வேண்டும். இதுபோன்ற வழிகாட்டுதல் எல்லாத் தீமைகளில் இருந்தும்  அவர்களை விலக்கி வைப்பதோடு மட்டுமல்லாமல் அசுர அரக்கனாகிய தற்கொலையிடமிருந்துதள்ளி வைத்து வெற்றி வானில் சிறகடிக்க வைக்கும்.

முன்னாள் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர்,
நேரு யுவகேந்திரா இந்திய அரசு கடலூர்
முன்னாள்  மண்டல ஒருங்கிணைப்பாளர்,
சமுதாய நலப்பணி திட்டம் ,புதுச்சேரிஅரசு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com