ஆண்கள் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண்!

ஜனவரி -26 அன்று தில்லியில் நடைபெற்ற 71- ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவின் போது 146 ராணுவ வீரர்கள் அடங்கிய இந்திய ராணுவ வீரர்களின் அணிவகுப்பிற்கு தலைமை தாங்கி வழி நடத்தியிருக்கிறார்
ஆண்கள் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண்!

ஜனவரி -26 அன்று தில்லியில் நடைபெற்ற 71- ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவின் போது 146 ராணுவ வீரர்கள் அடங்கிய இந்திய ராணுவ வீரர்களின் அணிவகுப்பிற்கு தலைமை தாங்கி வழி நடத்தியிருக்கிறார் கேப்டன் தான்யா ஷெர்கில். இதன்மூலம் இந்திய ராணுவ வரலாற்றிலேயே முதன்முறையாக ஆண்கள் படைப்பிரிவுக்குத் தலைமைதாங்கி வழிநடத்திய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் இவர்.
 பஞ்சாபின் ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர் தான்யாவுக்கு வயது 26 . நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பி.டெக். படித்திருக்கிறார். தற்போது ஜபல்பூர் ராணுவத் தகவல் தொடர்புத் துறையில் கேப்டனாகப் பணியாற்றி வருகிறார்.
 தான்யாவின் தந்தை, தாத்தா இருவருமே இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளனர். சிறு வயது முதலே அப்பாவை ராணுவ உடையில் பார்த்து பார்த்து வளர்ந்தவர் என்பதால் தான்யாவும் சிறுவயது முதலே இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தாராம்.
 2017-இல் ராணுவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்றுள்ளார் தான்யா.
 முதன்முறையாக ஆண்கள் படைப்பிரிவுக்கு தலைமையேற்று அணிவகுப்பு மேற்கொண்டது குறித்து தான்யாவிடம் கேட்டதற்கு, " ராணுவ அணிவகுப்பில் ஆண், பெண், ஹிந்து, முஸ்லிம், பஞ்சாபி, மராத்தி என்றெல்லாம் கிடையாது. ராணுவ உடையை உடுத்திவிட்டால் எல்லாருமே ராணுவ அதிகாரிதான்'' என்றார்.
 இதுகுறித்து அவரது தந்தை சூரத் சிங் கில் கூறுகையில்: "இந்த 71 ஆண்டு குடியரசு தினவிழா வரலாற்றில் இதுவரை யாருக்கும் கிட்டாத வாய்ப்பாக இந்திய ராணுவ வீரர்கள் அடங்கிய பிரிவிற்கு என் மகள் தலைமை தாங்கி வழி நடத்தி வந்ததை பார்த்தபோது மிக மிக சந்தோஷமாக இருந்தது. இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க அவள் நிச்சயமாக அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்'' என்றார்.
 -ரிஷி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com