வாழ்க்கையை மாற்றிய "யூடியூப்'

வாழ்க்கையில் முன்னேற ஏதாவது ஒரு வேலையை தேடிக் கொள்ள வேண்டுமென்று நினைத்த பிரஜக்தா கோலி, முதலில் தேர்ந்தெடுத்தது ரேடியோ ஜாக்கி.
வாழ்க்கையை மாற்றிய "யூடியூப்'

வாழ்க்கையில் முன்னேற ஏதாவது ஒரு வேலையை தேடிக் கொள்ள வேண்டுமென்று நினைத்த பிரஜக்தா கோலி, முதலில் தேர்ந்தெடுத்தது ரேடியோ ஜாக்கி. வெகு சீக்கிரத்திலேயே இந்த வேலையில் நல்ல எதிர்காலம் இல்லை என்று கருதிய பிரஜக்தாவுக்கு, குறுகிய காலத்தில் பிரபலமடைந்துள்ள யூ டியூப் மேடை அமைத்து தந்தது.
 2015- ஆம் ஆண்டு இவர் துணிச்சலுடன் தனியாக ஙஞநபகவ நஅசஉ என்ற சேனல் ஒன்றை தொடங்கினார். ""நான் யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கப் போகிறேன். இதன்மூலம் நான் லாபமடைவேனோ, நஷ்டமடைவேனோ என்பது தெரியாது'' என்று என் பெற்றோரிடம் நான் கூறியபோது. "அதைப் பற்றி கவலைப்படாதே. நாங்கள் உனக்குத் துணையாக இருக்கிறோம்' என்று தைரிய மூட்டினர். என்று கூறும் பிரஜக்தாவுக்கு இத்துறையில் இறங்கும்போது எந்தவொரு திட்டமோ, வழிகாட்டிகளோ இல்லை.
 முதன்முதலாக தான் தயாரித்த "டைப்ஸ் ஆப் சிங்கிள்ஸ் ஆன் வாலன்டைன் டே' என்ற வீடியோவை ஒளிபரப்பியபோது, எந்தவித வரவேற்பும் இல்லாததால், நகைச்சுவையாக புதுமையாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தாராம். நிஜ வாழ்க்கையில் சந்தித்த சிலரையே கற்பனை பாத்திரங்களாக உருவகப்படுத்தி, தானும் ஒரு பாத்திரமாக அதில் நடித்து ஒளிப்பரப்பியபோது, பார்வையாளர்கள் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியது. ஏற்கெனவே ரேடியோ ஜாக்கியாக இருந்த அனுபவம் இவருக்கு பெரும் உதவியாக இருந்தது. இவரது நகைச்சுவை நிகழ்ச்சிகள் பாலிவுட் நட்சத்திரங்களிடையே மிகவும் பிரபலமாகி பாராட்டுகளைப் பெறத் தொடங்கியது.
 இந்த வாய்ப்பை சமயோசிதமாக தன் நிகழ்ச்சிகளுக்கு பிரஜக்தா பயன்படுத்திக் கொள்ள நினைத்தார். ஹிருத்திக் ரோஷன், அலியாபட், வருண் தவான், பிரியங்கா சோப்ரா, ஆயுஷ்மன் குரானா போன்ற பிரபல நட்சத்திரங்களின் பேட்டிகளை ஒளிப்பரப்பத் தொடங்கினார். அவர்களிடம் இவர் கேட்கும் வித்தியாசமான கேள்விகள், அணுகுமுறை பார்வையாளர்களை கவரவே, இன்று இவரது யூடியூப் சந்தா
 தாரர்கள் எண்ணிக்கை 44 லட்சமாக உயர்ந்துள்ளது. தனக்கு பிடித்தமான ரஸ்ஸல் பீட்டர்ஸ் என்பவரை பேட்டி கண்டு ஒளிபரப்பியபோது, எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பாராட்டினைப் பெற்றார் பிரஜக்தா. தன்னைப் போல் யூ டியூப் சேனல் நடத்தும் மற்ற பிரபலங்களுடன் தொடர்பு கொண்டு மேலும் பல புதிய நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பத் தொடங்கினார்.
 வாரந்தோறும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் புதிய நிகழ்ச்சிகளை யூ டியூப்பில் ஒளிப்பரப்புவதற்காக தயாரிக்கிறார். கூடவே இதை இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் ட்விட்டரிலும் இடம் பெறச் செய்கிறார். இதன் காரணமாக 2018-ஆம் ஆண்டு உலக அளவிலான யூ டியூப்பின் "கிரியேட்டர்ஸ் ஃபார் சேஞ்ச்' என்ற அமைப்பின் இந்திய தூதுவராக பிரஜக்தா நியமிக்கப்பட்டதோடு, ஐக்கிய நாடுகளின் "இன்டர்நேஷனல் டே ஆப் டாலரன்ஸ்' நிகழ்ச்சியிலும் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார்.
 ஒரு மாறுதலுக்காக ஒளிபரப்ப இவர் தயாரித்த "நோ அஃபென்ஸ்' என்ற இசை வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு முறையும் இவர் பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும்போது, இந்திய பாரம்பரிய உடைகளான சேலை, சல்வார்கமிஸ், குர்தா போன்றவைகளையே அணிந்து செல்வாராம். இது மற்றவர்களின் கவனத்தை சுலபமாக ஈர்க்க உதவுகிறது'' என்கிறார்.
 - பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com