புளிச்சக் கீரையின் சத்துகளும் பயன்களும்...!

புளிச்சக் கீரையில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது
புளிச்சக் கீரையின் சத்துகளும் பயன்களும்...!

புளிச்சக் கீரையில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்சக் கீரை பசியை தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது.
 * புளிச்சக் கீரையில் தாது பொருட்களும், இரும்பு சத்துகளும், வைட்டமின் சத்துகளும் கணிசமான அளவு கலந்துள்ளதால் எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு.
 * புளிச்சக் கீரை கட்டிகளை ஆற்றக் கூடியதும், பித்தத்தைப் போக்கவல்லதும், உடல் வலி, வீக்கத்தை குணமாக்கும் தன்மையும் கொண்டது.
 * உள் உறுப்புகளுக்கு புத்துணர்வு கொடுக்க கூடிய கீரை இது . வலி, வீக்கத்தைப் போக்கும். புண்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது. தோல், எலும்புகள் பாதிப்படைவதை தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
 * புளிச்சக் கீரையை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும்.
 * புளிச்சக் கீரையின் பூக்களை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். பூக்களை நசுக்கி சாறு எடுக்கவும். ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும். சுவாச கோளாறை போக்குகிறது.
 * சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.
 * காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் முதலிடம் வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com