அழகுக்கு அழகு! ஆரோக்கியமான சருமம் பெற சிறந்த ரகசியங்கள்!

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமம் என்பது ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் நீங்கள் அடையக்கூடிய ஒன்றல்ல! ஆரோக்கியமான பழக்கவழக்கங்களின் கலவையும், அன்றாட நடைமுறைகளும்
அழகுக்கு அழகு! ஆரோக்கியமான சருமம் பெற சிறந்த ரகசியங்கள்!

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமம் என்பது ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் நீங்கள் அடையக்கூடிய ஒன்றல்ல! ஆரோக்கியமான பழக்கவழக்கங்களின் கலவையும், அன்றாட நடைமுறைகளும் நீண்ட காலத்திற்கு சிறந்த, ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கும். ஆரோக்கியமான சருமத்திற்கான உங்கள் பயணத்தை இன்றே தொடங்க இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்கிறார் நியூட்ரிஷியன் மற்றும் வெல்நஸ் கன்சல்டன்ட் ஷீலா கிருஷ்ணசாமி.
 நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதுவாக உள்ளீர்கள்!
 இந்த பழமொழி இன்றும் உண்மையாக உள்ளது மற்றும் உங்கள் உணவில் தோலுக்கு நட்பு உணவுகளை சேர்ப்பது முக்கியம். பாதாம் போன்ற கொட்டைகள் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ (ஆல்பா-டோகோபெரோல்) ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் அவை சரும ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் "ஆண்டி ஏஜிங்' பண்புகளை கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
 நீரேற்றமாக வைத்திருங்கள்
 தினமும் ஏறக்குறைய 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும்! நீங்கள் செய்யக்கூடிய மற்றொரு பெரிய விஷயம் என்னவென்றால், கீரைகள், சுரைக்காய், வெள்ளரிக்காய், சாம்பல் பூசணிக்காய்,சுரைக்காய்,புடலங்காய் பீர்க்கங்காய் மற்றும் அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட தக்காளி போன்ற காய்கறிகளைச் சேர்க்க வேண்டும். மேலும், ஆரோக்கியமான சருமத்திற்கான உங்கள் அன்றாட வழக்கத்தில் மூலிகை தேநீர், இளநீர், மோர், எலுமிச்சைச் சாறு போன்ற பானங்களை சேர்க்கவும்.
 உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க முயற்சி செய்யவும்!
 மன அழுத்தம் கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது, இது சருமம் ஈரப்பதத்தை தக்கவைக்கும் திறனைக் குறைக்கிறது. தெளிவான சருமத்திற்கு, உங்கள் மன அழுத்தத்தை குறைக்க வேண்டியது அவசியம். அமைதியான மனதைப் பேணுவதற்கு பல வழிகள் உள்ளன, மேலும் இதுபோன்ற ஒரு வழி யோகாசனம் அல்லது தியானத்தை ஒவ்வொரு நாளும் சுமார் 10 - 15 நிமிடம் பயிற்சி செய்வது. காலையில் இதைச் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது, நீங்கள் உங்கள் நாளைத் தொடங்குவதற்கு முன்பும், நீண்ட காலத்திற்கு பின்னர் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை நீங்கள் காண்பீர்கள்.

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்!
 வியர்வை சிந்துங்கள்! எந்தவொரு உடற்பயிற்சியும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் குறிப்பாக உங்கள் சருமத்திற்கும் நல்லது. தவறாமல் உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலின் சுத்திகரிப்பு செயல்முறையை துரிதப்படுத்த உதவுகிறது.
 பலருக்கு, தங்களது பிஸியான வாழ்க்கை முறையில் வழக்கமான உடற்பயிற்சி முறையை ஏற்படுத்துவது ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றலாம், ஏனெனில் வொர்க்அவுட்டிற்குப் பிறகு உடனடியாக நீங்கள் பசியுடன் இருப்பதாக உணர்வீர்கள்.
 அத்தகைய சந்தர்ப்பத்தில், ஆரோக்கியமற்ற உணவை உண்பதை தவிர்க்க ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பிந்தைய ஒர்க்அவுட் சிற்றுண்டியை உருவாக்க வறுத்த பாதாம் ஒரு சிலவற்றை வைத்திருங்கள். பாதாம் புரதத்தின் வளமான மூலமாகும், இது ஊட்டச்சத்து ஆகும், இது ஆற்றல் விளைவிக்கும், தசை வளர்ச்சிக்கும் பராமரிப்பிற்கும் பங்களிப்பதாக அறியப்பட்டுள்ளது.

புகைப்பதை நிறுத்துங்கள்!
 புகையிலை சார்ந்த பொருள்கள் வயதாகும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது மற்றும் சாதகமற்ற தோல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தோல் பாதிப்பு மீள முடியாதது மற்றும் முன்கூட்டிய சுருக்கங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
 இதன் முதல் படி லாகிரிப் பொருள்களை நிறுத்துவது ஆகும். உங்கள் உணவில் தோல் நட்பு உணவுகளை சேர்ப்பதும் முக்கியம். டேவிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய பைலட் ஆய்வில், உங்கள் அழகு வழக்கத்தின் ஒரு பகுதியாக பாதாம் சேர்ப்பது தோல் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. என கண்டறியப்பட்டுள்ளது.
 - ரிஷி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com