இந்திய அழகிக்கு 3-ஆவது இடம்!

2019 - ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி சமீபத்தில் நடைபெற்றது. அதில் உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அழகிக்கு 3-ஆவது இடம்!

2019 - ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி சமீபத்தில் நடைபெற்றது. அதில் உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாவது இடத்தையும், பிரான்சின் ஓபிலி மெசினோ இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.

23 வயதாகும் டோனி-ஆன் சிங், அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் பெண்கள் படிப்பு மற்றும் உளவியல் மாணவியாக இருக்கிறார். மிஸ் வேர்ல்ட் வலைதளம் இவரைப்பற்றி மேலும் கூறுகையில், டோனி-ஆன் சிங் மருத்துவ மருத்துவராக ஆசைப்படுகிறாராம். முன்னதாக பல்கலைக்கழகத்தில் கரீபியன் மாணவர் சங்கத்தின் தலைவராக பணியாற்றி இருக்கிறார். சமூக சேவகியான டோனி-ஆன் சிங் உலக அழகி போட்டியை வென்ற நான்காவது ஜமைக்கா பெண் ஆவார்.

இவர் தனது ஓய்வு நேரத்தில் பாடுவது, சமைப்பது, தன்னார்வத் தொண்டு செய்வது போன்றவற்றை விரும்புவாராம். இவரது வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் என்ன என்று கேட்டதற்கு, அவரது தாயார், அவருடைய கனவுகளை முடிந்தவரை எல்லா வழிகளிலும் தொடர அனுமதித்தும் ஆதரவளித்தும் பெருமை சேர்த்தது தான் என்று கூறியிருக்கிறார்.

ஜமைக்காவின் லிசா ஹன்னா 1993 -ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றார். அதன் பிறகு இப்போதுதான் ஜமைக்கா உலக அழகி பட்டத்தை வென்றுள்ளதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com