போட்டி தேர்வு: முதலிடத்தில் பெண்கள்...!

தமிழக அரசின் முதல் பிரிவு (Group I) பதவிகளுக்கான போட்டித் தேர்வில் முதல் எட்டு ஸ்தானங்களை பெற்று தமிழக மகளிர் சாதனை படைத்துள்ளனர்.
போட்டி தேர்வு: முதலிடத்தில் பெண்கள்...!

தமிழக அரசின் முதல் பிரிவு (எழ்ர்ன்ல் ஐ) பதவிகளுக்கான போட்டித் தேர்வில் முதல் எட்டு ஸ்தானங்களை பெற்று தமிழக மகளிர் சாதனை படைத்துள்ளனர்.
முறையாக கவனம் செலுத்தி கவனமாகப் பாடங்களை படித்தால், தமிழக அரசுத் துறைகளில் கை நிறைய சம்பளத்துடன் கண்பட்டுவிடும் அந்தஸ்துடன் கூடிய முதல் பிரிவு பதவிகளில் முதல் ஐம்பது இடங்களில் முப்பத்தைந்து இடங்களை மகளிர் கைப்பற்றியுள்ளனர்.

இதுவும் ஒரு சாதனைதான்..!

இந்தத் தேர்வில் முதல் ஸ்தானத்தில் தேர்வு பெற்றிருக்கும் அர்ச்சனா சிவகங்கையைச் சேர்ந்தவர். நான்காம் ஸ்தானத்தைப் பிடித்திருப்பவர் பட்டாசு தொழிலாளியான மகாலட்சுமி.

தமிழக அரசின் முதல் பிரிவில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் போன்ற எட்டு வகை உயர்ந்த பதவிகள் அடங்கும். அத்தகைய பதவிகளில் 181 காலியிடங்கள் ஏற்பட்டது.

இந்தக் காலியிடங்களுக்கு நியமனம் செய்ய 2019 மார்ச் மாதம் "முதல் நிலை' போட்டித் தேர்வுகள் நடந்தன. சுமார் இரண்டேகால் லட்சம் பேர் முதல் கட்ட போட்டித் தேர்வை எழுதினர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் 9,442 பேர் மட்டும்தான். பிறகு அடுத்த கட்ட முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்வு பெற்ற 363 பேர் சென்ற டிசம்பர் 23 முதல் 31 வரை நடந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியானதில், மொத்தம் 850 மதிப்பெண்களுக்கு 569 மதிப்பெண்கள் ஈட்டிய அர்ச்சனா முதலிடத்தைப் பிடித்தார். அர்ச்சனாவுக்கு வயது முப்பது:

""நான் சிவகங்கையைச் சேர்ந்தவள். அப்பா உதயகுமார் வணிகவரித் துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர். அம்மா ரேணுகாதேவி. நான் படித்தது ஸ்ரீவில்லிபுத்துôர் கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில். படித்து முடித்ததும் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சென்னையில் வேலை. 2010 - இல் வேலையில் அமர்ந்தேன். பிறகு திருமணம். கணவர் கணேஷுக்குப் பெங்களூருவில் வேலை. ஏழு ஆண்டுகள் அந்த வேலையில் தொடர்ந்தேன்.

தமிழக அரசின் முதல் பிரிவுத் தேர்வுகளுக்காக கணினித்துறை வேலையை ராஜினாமா செய்து விட்டு சுமார் ஒன்றரை ஆண்டு காலம் தேர்வுக்கு என்னைத் தயார் செய்யும் வேலையில் ஈடுபடுத்திக் கொண்டேன், கடினமான பயிற்சியில் தினமும் பத்து மணி நேரம் செலவழித்தேன். அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. முதல் முயற்சியிலேயே தேர்வில் முதலாவதாகத் தேர்வு பெற்றுள்ளதினால், எனக்கும் கணவருக்கும் பெற்றோருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி''என்கிறார் அர்ச்சனா.

இரண்டாம் இடத்தில் தேர்வாகியிருப்பவர் யுரேகா. இப்போது காவல் துணை கண்காணிப்பாளராகப் பணி புரிந்துவரும் தனலட்சுமிக்கு மூன்றாம் இடம். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஊரைச் சேர்ந்த மகாலட்சுமி நான்வதாக வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு வயது 26. மகாலட்சுமியின் பெற்றோர் கருப்பசாமி - ராஜேஸ்வரி பட்டாசு தயாரிக்கும் தொழிலாளிகள்.

""பட்டாசுத் தொழில் எங்கள்து குடும்பத்த தொழில். நாற்பது ஆண்டுகளாக அப்பாவும் அம்மாவும் இந்தத் தொழிலைச் செய்து வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து நானும் பட்டாசு தொழிலாளியானேன். பகலில் பட்டாசு.. இரவில் படிப்பென்று வகுத்துக் கொண்டேன், முதல், இரண்டாம் முயற்சியில் லட்சியம் நிறைவேறவில்லை. மூன்றாம் முயற்சியில் நான்காம் ஸ்தானத்தில் வெற்றி பெற முடிந்தது'' என்கிறார் மகாலட்சுமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com