வீட்டுப் பொருட்களை சுத்தம் செய்ய சில எளிய டிப்ஸ்

சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரில் நனைத்து அதைக் கொண்டு காஸ் அடுப்பு, கண்ணாடிகளைத் துடைத்தால் பளிச்சென்று ஆகிவிடும்.
வீட்டுப் பொருட்களை சுத்தம் செய்ய சில எளிய டிப்ஸ்

கண்ணாடிகள்:

சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரில் நனைத்து அதைக் கொண்டு காஸ் அடுப்பு, கண்ணாடிகளைத் துடைத்தால் பளிச்சென்று ஆகிவிடும்.


கதவு, ஜன்னல்:

கதவுகள் மற்றும் ஜன்னலை சுத்தப்படுத்த ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் சோடா உப்பை கலந்து அதில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழியுங்கள். ஒரு துணியை இதில் நனைத்து ஜன்னல் சட்டங்களைத் துடைத்தால், உங்கள் ஜன்னல் சுத்தமாக பளீரென மின்னும்.

சமையலறை:

சால்ட் உப்புடன், சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து காஸ் அடுப்பை துடைத்தால் ஸ்டவ் பளிச்சென்று இருக்கும். அதுபோன்று, மளிகைப் பொருட்கள் போட்டு வைத்திருக்கும், பிளாஸ்டிக், ஸ்டீல் டப்பாக்களை வெதுப்பான நீரில் சிறிது சோப் ஆயில் மற்றும் எலுமிச்சைச்சாறு சிறிது கலந்து, அதில் காட்டன் துணியை நனைத்து அதைக்கொண்டு டப்பாக்களை துடைத்தால் பளிச்சென்று இருக்கும். அல்லது டப்பாக்களில் உள்ள பொருட்களை தனியாக எடுத்து வைத்துவிட்டு சபீனா, சோப் கொண்டு நன்கு தேய்த்து கழுவலாம்.

சிங்க்:

ஸ்பிரே கிளீனர்கள் அல்லது வினிகரை நீரில் கலந்து சிங்க்கை சுத்தம் செய்ய பளிச்சென்று இருக்கும்.

பெட்ஷீட்:

திரைச்சீலை, பெட்ஷீட் போன்றவற்றை சுத்தம் செய்ய, சுடு தண்ணீரில் சோப்புத் தூளை கலந்து அதில் திரைச்சீலை, பெட்ஷீட்டுகளை 15 நிமிடம் ஊறவைத்து பின் வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தால் அழுக்குகள், எண்ணெய் கறைகள் போன்றவை நீங்கி பளிச்சென்றிருக்கும்.

அயர்ன் பாக்ஸ்:

அயர்ன் பாக்ஸின் அடிப்பக்கத்தில் ஏற்படும் கறைகளைப் போக்க சோடாமாவை ஈரத்துணியில் தொட்டு கறையின் மீது தேய்த்தால் கறை போய்விடும்.

ஒவ்வொருமுறை தரையைத் துடைக்கும்போது நீரில் சிறிது எலுமிச்சைச்சாறு, உப்பு, கம்போர்ட் கலந்து துடைத்தால், தரை பளிச்சென்றும், வாசமாகவும் இருக்கும்.

வீட்டை சுத்தம் செய்யத் தொடங்கியவுடன் கைகளில் க்ளவுஸ் அணிந்து கொள்ளவும். க்ளவுஸ் அணிந்து சுத்தம் செய்வது கைக்கு சிறிது அசெளகரியத்தை தந்தாலும், இதுவே பாதுகாப்பானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com