டிப்ஸ்..டிப்ஸ்.. (29/01/2020)

தக்காளி சட்னி செய்யும்போது சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் மணமாக இருக்கும்.
டிப்ஸ்..டிப்ஸ்.. (29/01/2020)

• தக்காளி சட்னி செய்யும்போது சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் மணமாக இருக்கும்.
• பனங்கிழங்கை பொடியாக நறுக்கி சின்ன வெங்காயம், மிளகாய், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்.
• சப்பாத்தி மிருதுவாக இருக்க மாவு பிசையும்போது மாவின் அளவுக்கு சரி பாதி அதாவது, ஐம்பது சதவிகிதம் தண்ணீர்விட்டு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
• ரசத்தை இறக்கும்போது அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து இறக்கினால் , ரசம் தனிச்சுவையுடன் இருக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர். 
• வாழைத்தண்டு கூட்டு மற்றும் பொரியல் செய்யும்போது அத்துடன் சிறிது முருங்கைகீரையை சேர்த்து செய்தால் சுவையாகவும் மணமும் மிகவும் நன்றாக இருக்கும். உடம்புக்கும் மிகவும் நல்லது.
• சுண்டல் செய்ய பட்டாணி, கொண்டைக்கடலை போன்றவைகளை ஊற வைக்க மறந்துவிட்டால் ஒரு பிளாஸ்கில் வெந்நீரை நிரப்பி அதில் பட்டாணி, கொண்டைக் கடலையைப் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்தால் டக்கென்று ஊறிவிடும்.
- எல்.நஞ்சன், முக்கிமலை. 
கட்லெட் சில டிப்ஸ்கள்
• கட்லெட் தயாரிக்க பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் சோளமாவும் சேர்க்கலாம். கட்லெட்க்கு அதிக ருசி கிடைக்கும்.
• கட்லெட் தயாரிக்க வைத்திருக்கும் பொருள்களில் மல்லி இலையோ, செலரியோ சிறிதளவு நறுக்கி சேர்த்தால் சுவை அதிகரிக்கும். 
• கட்லெட் பொரித்தெடுக்கும்போது அது மூழ்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். இல்லாவிட்டால் கட்லெட் சரியாக வேகாது. அல்லது கட்லெட்டை தோசைக் கல்லில் நெய் ஊற்றி அதிலும் சுட்டெடுக்கலாம். 
• நறுக்கிய பெரிய வெங்காயம், மிளகுத்தூள், வேக வைத்த காலிஃப்ளவர் போன்றவை சேர்த்தும் கட்லெட் செய்யலாம்.
• கட்லெட் உடையாதிருக்க மெதுவாக திருப்ப வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com