தலைமுடி செழித்து வளர...

கறிவேப்பிலையைப் பால் விட்டு அரைத்து தலைமுடியின் வேர்கால்களில் நன்கு படும்படி தேய்த்து அரை மணி நேரம் வைத்திருந்து பின் சீயக்காய்த் தூள் கொண்டு தலைக்கு குளிக்க வேண்டும்.
தலைமுடி செழித்து வளர...

கறிவேப்பிலையைப் பால் விட்டு அரைத்து தலைமுடியின் வேர்கால்களில் நன்கு படும்படி தேய்த்து அரை மணி நேரம் வைத்திருந்து பின் சீயக்காய்த் தூள் கொண்டு தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வர முடி கருமையுடன் நன்கு வளரும்.
• பாதாம் ஆயில் 1 தேக்கரண்டி, ஆலிவ் ஆயில் 1 தேக்கரண்டி இரண்டையும் கலந்து தினமும் தலைக்கு தடவி வர முடி அடர்த்தியுடன் நீளமாக வளரும்.
• வாரம் 1 நாள் முட்டை வெள்ளைக் கருவை தலைக்கு தேய்த்து 10 நிமிடம் ஊறவிட்டு அலசி வர தலைமுடி சிக்குகள் அதிகம் பிடிக்காமல் மிருதுவாக இருக்கும்.
• அதிகம் உஷ்ணம் காரணமாக முடி உதிர்ந்தால், வெந்தயம் 1 தேக்கரண்டி ஊற வைத்து, அத்துடன் முட்டை வெண்கரு, தயிர் இம்மூன்றையும் ஒன்றாக கலந்து வாரம் 1 நாள் தலையில் தேய்த்து குளித்து வர, தலைமுடி செழித்து வளரும். இது இயற்கை ஹேர் கண்டிஷனராகும். 
• அதிகம் பேன், பொடுகு இருப்பவர்கள், சீதாப்பழ விதை, மருதாணி விதை, வெந்தயம் மூன்றையும் 2 தேக்கரண்டி எடுத்து பாலில் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவிட்டு, வெந்நீரில் சீயக்காய்த் தூள் கொண்டு தேய்த்து வாரம் ஒருமுறை குளித்து வர, பேன், பொடுகு தொல்லை நீங்கி முடி நன்கு வளரும். ஷாம்பு உபயோகிக்கக் கூடாது.
• பாசிப்பருப்பு பொடி, தயிர் கலந்து தலைக்குத் தேய்த்து 10 நிமிடம் ஊறிய பின் வெந்நீரில் குளித்து வர தலைமுடி பட்டுப்போல் மின்னும்.
• 1 கைப்பிடியளவு கறிவேப்பிலை, கால் தேக்கரண்டி கசகசா, 2 பாதாம் பருப்பு மூன்றையும் தேங்காய்ப்பால் விட்டு அரைத்து தலைக்குத் தேய்த்து வாரம் 1 முறை குளித்து வர தலைமுடி கருமையாக நன்கு வளரும்.
• வாரம் 1 நாள் வெண்ணெய்யைத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து சீயக்காய்த்தூள் கொண்டு அலசி வர, முடி நன்கு வளரும். 
- எஸ்.சரோஜா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com