டிப்ஸ்... டிப்ஸ்...

நான்கு ஏலக்காய், எட்டு கிராம்பு, இரண்டு தேக்கரண்டி இஞ்சித் துண்டுகளுடன் எட்டு கிண்ணம் நீர்விட்டு கொதிக்கவிடவும். 
டிப்ஸ்... டிப்ஸ்...

ஏலக்காய் மருத்துவம்!

நான்கு ஏலக்காய், எட்டு கிராம்பு, இரண்டு தேக்கரண்டி இஞ்சித் துண்டுகளுடன் எட்டு கிண்ணம் நீர்விட்டு கொதிக்கவிடவும். சரிபாதியாக நீர் வற்றியவுடன் வடிகட்டி பால் சேர்த்து குடித்து வந்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காயைப் பொடி செய்து அத்துடன் தேன் கலந்து நாக்கில் மூன்று வேலை தடவினால் வாந்தி நின்றுவிடும்.

ஒரு டம்ளர் தேனுடன் கொஞ்சம் ஏலக்காய்த்தூள் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.

ஏலக்காயைப் பொடி செய்து தினமும் காலை, மாலை வேளைகளில் வெறும் வயிற்றில் நெய் கலந்து சாப்பிட்டு வர சளி விரைவில் நீங்கும்.

ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய்ப் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்து வர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும்.

ஏலக்காயில் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடென்ட், வைட்டமின் சத்துகள் இருக்கின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அடிக்கடி விக்கல் வருபவர்கள் சிறிது ஏலக்காய் பொடியுடன் புதினா இலையைச் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் விக்கல் நிற்கும்.

ஏலக்காயைப் பொடி செய்து இரண்டு கிராம் அளவு எடுத்து அத்துடன் தேவையான அளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துக் கொள்ளவும். இதை சாப்பாட்டுக்கு பின் உண்டு வந்தால் அஜீரணம், வாந்தி, குமட்டல் மற்றும் கர்ப்பகால வாந்தி போன்றவை சரியாகும்.

ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலினால் அவதிப்படுபவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகுவது நல்லது. தண்ணீரை கொதிக்கவிட்டு சிறிதளவு இஞ்சியை நசுக்கிப் போட்டு சிறிது ஏலக்காய்ப் பொடி சில துளசி இலைகளையும், சிறிதளவு கிராம்புத் தூளும் போட்டு கொதிக்க வைத்து பின்பு இறக்கி வெது வெதுப்பாக குடித்தால் மேற்கண்ட அவஸ்தையிலிருந்து விடுபடலாம்.

- சி.ஆர்.ஹரிஹரன்


தோசைமாவில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து வார்த்தால் தோசை மிகவும் சுவையாக இருக்கும்.

இட்லி மாவு கெட்டியாக இருக்கிறதா நான்கு அப்பங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து அதற்குப் பின் இட்லி வார்த்துப் பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.

தேன்குழலுக்கு அரைத்த மாவு மீந்துவிட்டால் அதைக் கரைத்து உப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தோசை வார்த்தால் பட்டு பட்டாக தோசை வரும்.

இட்லி மாவு நீர்த்துப் போய்விட்டால் அதில் சிறிது ரவையை எண்ணெய்யில்லாமல் வறுத்து கலந்து அரைமணி நேரம் ஊறிய பின் இட்லி வார்க்கலாம்.

மிக்ஸியில் இட்லிமாவு அரைக்கிறீர்களா? அரிசி மாவையும், உளுந்து மாவையும் அரைத்துத் தனித்தனி பாத்திரத்தில் வழித்து அரைமணி நேர அவகாசத்திற்கு குளிர்ந்த நீரில் வைத்து, சூடு ஆறியபின் உப்பு போட்டு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் கலந்து கொட்டி வைத்தால், மறுநாள் இட்லி வார்க்கும்போது மல்லிகைப் பூ போன்று சாஃப்ட்டாக இருக்கும்.

- சீதாலட்சுமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com