அழகான புருவம் அமைய  சில டிப்ஸ்கள்!

புருவத்தை ட்ரிம்  செய்யுங்கள் அதை அழகாக்கலாம்.
அழகான புருவம் அமைய  சில டிப்ஸ்கள்!

புருவத்தை ட்ரிம்  செய்யுங்கள் அதை அழகாக்கலாம்.

 குறுகிய  நெற்றி புருவங்களுக்கு இடைவெளி  அதிகம் இருக்கட்டும்.
 நீண்ட நெற்றி புருவங்களுக்குள்  அதிக  இடைவெளி  தேவையில்லை.
 ஓவல் முகம் புருவம் சிறுவளைவுடன்  இருந்தால்  
வசீகரமாக  இருக்கும்.
 அகன்ற மூக்கு உள்ளவர்கள்  புருவங்களின்  இடை
வெளியை  அதிகப்படுத்தக் கூடாது.
 சதுரமுகம்:  பெரிய  வளைவாக  பிறை வடிவில்  மாற்றிக் கொண்டால்  முகம்  ஓவல்  வடிவமாகத் தெரியும்.
 புருவத்தின்  முடிவு  மிகவும்  கீழ் நோக்கி  இருந்தால்  வயதான  தோற்றம்  தரும்.
 புருவங்கள்  கறுகறுவென  இருக்க தினமும்  விளக்கெண்ணெய்  தடவ வேண்டும்.  நன்றாக  வளரவும் செய்யும்.
 கருப்பு நிறம்,  அழகிய முகம்  உள்ளவர்கள்  புருவத்தை  சரி செய்ய வேண்டாம்.
 வட்ட முகம் உள்ளவர்கள்  புருவம்  கீழ் நோக்கி  வருவது  போல் செய்து  கொள்ள வேண்டும்.
 நீண்ட  ஓவல்  முகம்  உள்ளவர்கள்  சிறிய புருவத்தை  அமைத்தால்  அழகு கூடும்.
 புருவங்கள்  நெருங்கி இருந்தால் முகம் குறுகி கண்கள் சிறிதாகத் தெரியும்.
 புருவங்கள்  நன்றாக  வளர ஆப்பிள்  பழத்தை  தேனில்  தொட்டுச் சாப்பிட  வேண்டும்.
 

-ஆர்.  ராமலட்சுமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com