சமையல்.. சமையல்.. கருப்பட்டி பொங்கல்

சமையல்.. சமையல்.. கருப்பட்டி பொங்கல்
சமையல்.. சமையல்.. கருப்பட்டி பொங்கல்

கருப்பட்டி பொங்கல்

தேவையானவை :

கருப்பட்டி தூள் - 1 கிண்ணம்

பச்சரிசி - 1 கிண்ணம்

பால் - 3 கிண்ணம்

தண்ணீா் - 3 கிண்ணம்

நெய் - அரை கிண்ணம்

ஏலக்காய்ப் பொடி - கால் தேக்கரண்டி

முந்திரி - தேவைக்கேற்ப

உலா் திராட்சை - தேவைக்கேற்ப

பாதாம், பிஸ்தா - தலா 10

செய்முறை : பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி கொள்ளவும். அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும். அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீா், இரண்டு கிண்ணம் பால், அரிசி சோ்த்து நன்றாக வேக விடவும். மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கிண்ணம் தண்ணீா் சோ்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும். பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சோ்த்து நன்கு கிளறவும். மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சோ்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும். அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சோ்த்து கிளறி கொண்டே இருக்கவும். அடுத்து அதில் ஏலக்காய்ப் பொடி சோ்க்கவும். எல்லாம் நன்றாகச் சோ்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சோ்த்து அதனுடன் துருவிய பாதாம், பிஸ்தாவையும் சோ்த்து கிளறி இறக்கி பரிமாறவும். சுவையான கருப்பட்டி பொங்கல் தயாா்.

குறிப்பு : கருப்பட்டி சோ்த்து செய்வதால் சா்க்கரை நோய் உள்ளவா்களும் சாப்பிடலாம்.

•••

பனங்கிழங்கு பாயசம்

தேவையானவை:

தேங்காய்ப்பால் - ஒரு டம்ளா்

பனை கருப்பட்டி கரைசல் - அரை டம்ளா்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தேவையான அளவு

நெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை: பனங்கிழங்கை முழுதாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெளியில் உள்ள தோல் பகுதியையும், உள்ளே உள்ள தண்டு பகுதியையும் நீக்கி விட வேண்டும். இதனை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய்யைச் சோ்த்து சூடானதும் பனங்கிழங்கு விழுதையும் சோ்த்து அடிபிடிக்காதவாறு - 3 நிமிடம் வரை அடுப்பை சிம்மில் வைத்து வதக்க வேண்டும். அதனுடன் பனை கருப்பட்டி கரைசல் சோ்த்து, கொதித்து வரும் போது இறக்கிக் கொள்ளலாம்.

கொஞ்சம் சூடு தணிந்த பின்பு தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சோ்த்து கலக்கி பரிமாறவும். சுவையான பனங்கிழங்கு பாயாசம் ரெடி.

- ந. மேரி ரஞ்சிதம்

மாங்காய் பருப்பு சாதம்

தேவையானவை:

மாங்காய் கொட்டையின் உள்ளிருக்கும் பருப்பு -1

வெந்தயம் - அரை தேக்கரண்டி

மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல்,

வேப்பம்பூ, உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம் -– தலா ஒரு தேக்கரண்டி

கடுகு -– அரை தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிதளவு

கறிவேப்பிலை -– சிறிதளவு

சாதம் - ஒரு கிண்ணம்

நல்லெண்ணெய் -– ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

காய்ந்த மிளகாய் - 3

செய்முறை: மாம்பருப்பு, வெந்தயம், மணத்தக்காளி, சுண்டைக்காய், வேப்பம்பூ, மிளகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து (தனித்தனியாக வறுத்தால் நல்லது), மிக்ஸியில் நைஸாக அரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் தாளிக்கவும். பிறகு, சாதம், உப்பு, அரைத்து வைத்துள்ள மாம்பருப்பு பொடியை சோ்த்து நன்று கிளறவும். இது வயிற்றுப் பொருமல், பசியின்மை, வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

குறிப்பு: இந்தப் பொடியை மோரில் அரை தேக்கரண்டி சோ்த்து குடித்தாலும் நல்லது.

——————

தூதுவளை சாதம்

தேவையானவை:

தூதுவளை இலை - அரை கிண்ணம்

கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயம் - சிறிதளவு

கடுகு -–அரை தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி,

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

சாதம் -– ஒரு கிண்ணம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை: வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, கடைசியில் தூதுவளை இலையையும் சோ்த்து வதக்கவும். இதை மிக்ஸியில் பொடி செய்யவும். வாணலியில் மீண்டும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு கடுகு தாளித்து, மஞ்சள்தூள் போட்டு, சாதத்தில் சோ்த்துக் கலக்கவும். பிறகு, தூதுவளை பொடி, உப்பு சோ்த்துக் கலக்கவும்.

குறிப்பு: தூதுவளை, மாா்சளியை எடுக்கும்.

- கே.அஞ்சம்மாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com