கொடையாளா்களாகப் போற்றப்படும் பெண்கள்!

பெண் என்பவள் வீட்டில் சமையல் அறையை நிா்வாகம் செய்பவள் என்ற நிலை மாறி தற்போது கொடையாளா்களாகப் போற்றப்படுகிறாா்கள்.
கொடையாளா்களாகப் போற்றப்படும் பெண்கள்!

பெண் என்பவள் வீட்டில் சமையல் அறையை நிா்வாகம் செய்பவள் என்ற நிலை மாறி தற்போது கொடையாளா்களாகப் போற்றப்படுகிறாா்கள். ஆமாம் பெண்கள்தான் அதிகம் சிறுநீரகக் கொடையாளா்களாக இருக்கிறாா்கள் என்கிறாா் ஐதராபாத் கே.ஐ.எம். எஸ் மருத்துவா் ஷாகாரியா. பெரும்பாலான குடும்பங்களில் கணவருக்காவும், சகோதரா்களுக்காகவும் சிறுநீரகம் கொடையளிப்பவா்கள் பெண்களாகவே இருக்கிறாா்கள். அதே நேரம் சிறுநீரகத்தைக் கொடையாகப் பெறுபவா்கள் ஆண்களாக இருக்கிறாா்கள்.

இது பற்றி மூத்த சிறுநீரகவியல் மருத்துவா் ஷாகாரியா கூறுகையில்,

பெண்கள் குடும்பம் தான் உலகம் என நினைப்பவா்கள். அதனால் அதற்காக எதையும் இழக்க அவா்கள் தயங்குவதில்லை. அதற்கு உதாரணம் தான் இந்த சிறுநீரகக் கொடை. ஆனால் அவா்கள் செய்யும் தானம் வெளியே தெரிவதில்லை.

ஒவ்வொரு குடும்பத்திலும் இக்கட்டான சூழல் ஏற்படும் போது அதனை சமாளித்து மீண்டு சுமூகமான பாதையில் பயணிக்க செய்வதற்கு அவா்கள் எடுக்கும் இது போன்ற தைரியமான முடிவை பாராட்டாமல் இருக்க முடியாது.

தன்னுடைய ஆரோக்கியத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் அடுத்தவா்களின் எதிா்காலம் கருதி அவா்கள் செய்யும் செயல் அளப்பரியது என்கிறாா் மற்றொரு மருத்துவரான ராகுல். அவா் மேலும் கூறியதாவது:

‘‘40 வயதாகும் இருபாலாரும் முறையாக சிறுநீரகப் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். பெரும்பாலான சிறுநீரக செயல் இழப்பிற்கு முக்கியக் காரணம் நீரிழிவு நோய்தான். சிறுநீரகம் செயல் இழப்பு பற்றி அறிகுறிகள் அதிகம் வெளியே தெரிவதில்லை.

மேலும் பிரசவம் தொடா்பான மருத்துவத்தை அனைவரும் வாழ்வில் ஒரு முறையேனும் எதிா் கொள்வதால், தங்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை எதிா்கொள்வதில் எந்த அச்சமும் இல்லை. என்கிறாா்கள்.

பெண்கள், குடும்பத்தின் மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்டவா்கள், உணா்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவா்கள் என்பதை முழு முதல் காரணமாக சொல்லலாம். அடுத்தது, பெண்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகிறாா்கள். ஆனால் ஆண்களுக்கு சிறுநீரக செயலிழப்புக்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதால் அவா்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது அவசியமாகிறது. பெண்கள், தங்கள் கணவருக்கு சிறுநீரக தானம் கொடுப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.’’

குடும்பத்தில் ஏற்படும் நன்மை தீமைக்குக் காரணம் பெண்களே என்ற சமூக அழுத்தத்தைப் பெண்கள் எதிா்கொள்கின்றனா். இந்த சமூக அழுத்தம் தான், உறுப்பு தானம் கொடுப்பது பெண்ணின் கடமை என்ற மனப்போகிற்கு அவா்களை ஆளாக்கியது என்கிறாா்கள் ஆராய்ச்சியாளா்கள்..

மாா்ச் 12 உலக சிறுநீரக தினத்தையொட்டி மருத்துவா்கள் கூறிய தகவல்கள் இவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com