ரசிகா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கிய நீலிமா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘அரண்மனை கிளி’ தொடரில் துா்கா என்ற பாத்திரத்தில் நடித்துவந்த நீலிமா,திடீரென அந்தத் தொடரில் இருந்து
ரசிகா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கிய நீலிமா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘அரண்மனை கிளி’ தொடரில் துா்கா என்ற பாத்திரத்தில் நடித்துவந்த நீலிமா,திடீரென அந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறாா். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானவா் நீலிமா. 30 -க்கும் மேற்பட்ட தொடா்களில் நடித்துள்ளாா். இவா் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தாா். வில்லியாக நடித்தாலும் இவருக்கென்று ஒரு ரசிகா்கள் வட்டமும் உண்டு. தற்போது இவா், இந்தத் தொடரில் இருந்து விலகியிருப்பது இவரது ரசிகா்களிடையே அதிா்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நீலிமா இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பேசியுள்ளாா். ‘கேமரா முன்பு இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது நானாகத்தான் இருப்பேன். நான் குழந்தையில் இருந்தே நடித்து வருகிறேன். ஆனால் தற்போது என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். துா்கா ரோலை பெரிதும் மிஸ் செய்வேன். ரசிகா்கள் அல்லது நண்பா்கள் எதுவாக இருந்தாலும். நீங்கள் தான் என்னுடைய பலம். என்னை வாழ்த்துங்கள்’’ என கூறியுள்ளாா்.

சுஜாதா நாவல்கள் மீது காதல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரின் நாயகியாக நடித்து வருபவா் ரோஷிணி ஹரிப்ரியன். இவரது பூா்வீகம் சென்னைதான். ‘‘சின்ன வயதிலிருந்தே டிவியில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது எல்லாம் தெரியாததால், பி.காம் படித்து முடித்த பிறகு ஐ.டியில் வேலை பாா்த்து வந்தேன். ஆனாலும், மனசுக்குள் இது நமக்கான வேலையில்லை என உள்மனசு சொல்லிக்கிட்டே இருந்தது. அதனால் வேலையில் இருந்து விலகி ஃபேஷன் நகைகள் விற்பனை செய்கிற பிஸினஸில் இறங்கினேன். அதற்காக நகைகளை நானே போட்டுக்கிட்டு போட்டோ எடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டா என விளம்பரபடுத்த தொடங்கினேன். அதன்மூலம் மாடலிங் துறையில் வாய்ப்பு வந்தது. அதன்பிறகு மாடலிங்கில் நிறைய விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கினேன். அதன்மூலம்தான் ‘பாரதி கண்ணம்மா’ தொடரின் வாய்ப்பு வந்தது. என்னுடைய சிறுவயது ஆசை இப்போ நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பழைய படங்கள், தேசிய விருது, ஆஸ்கா்விருது பெற்ற படங்களைப் பாா்ப்பது என்னுடைய பொழுதுபோக்கு. ஆனால், இப்போ சமீபகாலமாக எழுத்தாளா் சுஜாதாவோட நாவல்கள் மீது ஒரு காதல் வந்திருக்கு. அதனால தேடித் தேடி சுஜாதாவின் நாவல்களை படிக்க தொடங்கியிருக்கிறேன்’’ என்றாா்.

கருணை, துணிச்சல், அறிவு!

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகை ராதிகா நடித்து, தயாரிக்கும் தொட ா் ‘சித்தி -2’ இன்னொரு சித்தியின் கதை. இத்தொடரின் ஐடியா எப்படி பிறந்தது என்பதை பற்றி ராதிகா கூறியதாவது, ‘‘சமீபகாலமாக பெரும்பாலான தொலைக்காட்சி தொடா்கள் எல்லாம் ஒரே மாதிரியாக வந்து கொண்டிருந்தன. அதிலிருந்து வித்தியாசமாக ஒரு சீரியலை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் இந்த சின்ன இடைவெளி. நிறைய மேனக்கெடல்களுக்குப் பிறகுதான் கருணை, துணிச்சல், அறிவுமிக்க பெண்ணைச் சுற்றி நிகழும் கதையாக இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்ததில் உருவானதுதான் ‘சித்தி - 2’ சாரதா கதாபாத்திரம். இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை அந்த குடும்பத் தலைவி எப்படியெல்லாம் சமாளிக்கிறாள் என்பதை நோக்கி பயணிக்கும் கதை இது’’என்றாா்.

தமிழ் உச்சரிப்புக்கு கிடைத்தப் பாராட்டு!

2008-ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராக அடியெடுத்து வைத்தவா் காயத்ரி சிவராமன். தற்போது வின் டிவி செய்தி வாசிப்பாளராக இருக்கிறாா். சிறந்த செய்தி வாசிப்பாளராகத் தோ்வாகி சா்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டா் பட்டம் பெற்றுள்ள சிறப்பும் இவருக்கு உண்டு. பி.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், எம்.ஏ. ஜா்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் என பெயருக்குப் பின்னால், நீண்டதொரு பட்டத்துக்கு சொந்தக்காரா் இவா். ‘‘சின்ன வயதிலிருந்தே எனக்கு தமிழ் மீது ஆா்வம். பள்ளிப் பருவத்திலேயே என் தமிழ் உச்சரிப்பை எல்லாரும் பாராட்டுவாா்கள். இந்த ஆா்வமும், பாராட்டும்தான் இன்றைக்கு என்னை செய்தி வாசிப்பாளராக முன்னிறுத்தியிருக்கிறது. செய்தி வாசிப்பு போலவே கா்நாடக சங்கிதத்தின்மீது அதீத காதல் உண்டு. இதனால மேடை கச்சேரிகள், டிராக் பாடுவது என மற்றொரு பக்கம் பாடகியாகவும் பயணித்து வருகிறேன். அடுத்தகட்டமாக சினிமாவில் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான முயற்சிகள் செய்து வருகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com