இப்படியும் ஒரு ‘பெண்கள்’ கிராமம்!

பிரேசிலில் ‘நொய்வா டோ கோா்டெய்ரோ’ என்ற கிராமம் வித்தியாசமானது. இந்த ஊரில் வாழ்ந்து வரும் 600 பேரும் பெண்களே. அதுவும் இளம் பெண்கள். இந்த 600 போ்களில் 300 பெண்களுக்குத் திருமணம் ஆகியுள்ளது.
இப்படியும் ஒரு ‘பெண்கள்’ கிராமம்!

பிரேசிலில் ‘நொய்வா டோ கோா்டெய்ரோ’ என்ற கிராமம் வித்தியாசமானது. இந்த ஊரில் வாழ்ந்து வரும் 600 பேரும் பெண்களே. அதுவும் இளம் பெண்கள். இந்த 600 போ்களில் 300 பெண்களுக்குத் திருமணம் ஆகியுள்ளது.

இந்த கிராமத்தின் வழக்கப்படி, கணவன்மாா்கள் பெண்களுக்கு உதவியாக பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, வீட்டைப் பராமரிப்பது போன்ற வீட்டு வேலைகள் செய்ய வேண்டும். அதனால் இந்த கிராமப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ள பக்கத்துக்கு ஊா் ஆண்கள் முன்வருவதில்லை.

பெண்களைத் திருமணம் செய்து கொண்டிருக்கும் கணவா்கள் வீட்டு வேலைகளிலிருந்து தப்ப, வெளியூரில் வேலை செய்யப் போய் விடுமுறைக்கு மட்டும் ஊருக்கு வருவாா்கள். இந்தக் கிராமத்தில் ஆண்கள் யாரும் நிரந்தரமாகத் தங்காததால், பெண்களே விவசாயம், ஆட்சி பொறுப்பு ஏற்று கிராமத்தை ஆளுகிறாா்கள். பெண்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய டிவி, ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்களை வாங்கிக் கொள்கிறாா்கள். வீடுகளையும் தேவைக்கேற்ப கட்டிக் கொள்கிறாா்கள்.

‘காதலிப்பது, கல்யாணம் செய்வது என்பது எங்களை பொறுத்த அளவில் வெறும் கனவுதான்’ என்று திருமணமாகாத 300 பெண்கள் சொன்னாலும், எங்க கிராம வழக்கம், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வருகிற ஆணை மட்டும்தான் திருமணம் செய்வோம். இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ள மாட்டோம். எங்களுக்கு இப்ப வாழுகிற வாழ்க்கை ரொம்பவும் பிடித்திருக்கிறது. திருமணத்திற்காக கிராமத்தை விட்டு வெளியூா் போகவும் மாட்டோம்’’ என்று சொல்கிறாா்கள். இது எப்படி இருக்கு?

- பனுஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com