Enable Javscript for better performance
சின்னத்திரை மின்னல்கள்!- Dinamani

சுடச்சுட

  

  சின்னத்திரை மின்னல்கள்!

  By - ஸ்ரீ  |   Published on : 15th May 2020 04:52 PM  |   அ+அ அ-   |    |  

  mn8

  மற்றவர் கருத்துக்கு மதிப்பளியுங்கள்!

  சின்னத்திரையில் "மர்மதேசம்', "சின்ன பாப்பா பெரிய பாப்பா', "ரமணி ஸ்ள் ரமணி' போன்ற பல ஹிட்சீரியல்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை திறமையாக கையாண்டதன் மூலம் பெரியதிரைக்கு வந்தவர் தேவதர்ஷினி. பெரியத்திரையிலும் இவரது நகைச்சுவை கதாபாத்திரங்கள் களைக்கட்ட, இவருக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

  தேவதர்ஷினிக்கு சைக்காலஜிஸ்ட் என்ற இன்னொரு முகமும் உண்டு. தற்போது ஊரடங்கில் இருப்பது குறித்து அவர் கூறியிருப்பது, ""உண்மையா சொல்லனும்ன்னா இவ்வளவு நாள் ஷூட்டிங், ஷூட்டிங் என்று பிஸியாக இருந்ததால், வீட்டு வேலைகள் செய்வதில் இருந்து எஸ்கேப் ஆகிட்டிருந்தேன். அதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு இப்போது வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறேன்.

  இதைத்தவிர, என் மகள் நியதி இந்த வருடம் ப்ளஸ் டூ போகிறாள். அவளுக்கு தற்போது வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டார்கள். அதனால் அவளுக்கு உதவியாக இருப்பது, என்னோட படிப்பு தொடர்பான வேலைகள் என கொஞ்சம் பிஸியாகதான் போய்க்கிட்டு இருக்கிறது.

  இந்த ஊரடங்கு நேரத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள், ஒரு சைக்காலஜிஸ்ட்டா இதை நான் எப்படி பார்க்கிறேன்னா, எந்த ஒரு உறவுக்குள்ளேயும் எல்லாரும் ஒரே கருத்தில் ஒத்துப்போவார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, கருத்து வேறுபாடுகள் உருவாகும்போதே அதைப் புரிஞ்சுக்கிட்டு ஒருவர் மற்றவர் கருத்துக்கு மதிப்பு கொடுத்து கேட்டாலே இதுபோன்ற பிரச்னைகள் சரியாகிவிடும்''என்றார்.

  நடிகையின் உருக்கம்!

  தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "கல்யாணம் முதல்காதல் வரை" தொடரின் மூலம்சின்னத்திரை நடிகையானவர் பிரியா பவானி சங்கர். பெரியதிரையிலும் வாய்ப்புகள் வர "கடைக்குட்டி சிங்கம்', "மான்ஸ்டர்' போன்ற படங்களில் நடித்தார்.

  மயிலாடுதுறையை பூர்வீகமாக கொண்ட இவர், இளங்கலை எலக்ட்ரானிக்ஸ் முடித்துவிட்டு சிறிது காலம் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இருந்தாலும் பிரியா பவானிக்கு சிறு வயதிலிருந்தே நடிப்பு துறையில் வரவேண்டும் என்ற ஆசையிருந்ததால் அதற்கான முயற்சிகள் செய்து கொண்டே இருந்தாராம்.

  ஒரு கட்டத்தில் வாய்ப்புகிடைக்க திரைத்துறைக்குள் வந்தார். தற்போது ஊரடங்கால் வீட்டிற்குள்ளேயே முடங்கிகிடக்கும் நிலையைப் பற்றி அவர் கூறியிருப்பது, "" என் வாழ்க்கையில் சில கட்டங்களில் தனிமையாக இருக்கும் கொடுமையை அனுபவித்திருக்கிறேன். அப்போதெல்லாம் அந்த தனிமைச் சிறைக்குள் இருந்து வெளியே வரவேண்டும் என்று என்னை நானே தேற்றிக்கொள்வேன். அப்போது என் தோழி ஒருத்தி, "திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வா, எல்லாம் சரியாகிவிடும்' என்று சொன்னாள்.

  அதன்படி பல தடைகளைக் கடந்து கடந்த வருடம் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வந்தேன். மனதிற்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. இந்த ஆண்டும் சித்ரா பௌர்ணமிக்கு கிரிவலம் செல்ல வேண்டும் என்று காத்திருந்தேன். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள ஊரடங்கினால், உலகமே தனிமை நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அதனால் என் வீட்டு மாடியிலிருந்தபடியே சித்ரா பௌர்ணமி அன்று நிலவை தரிசனம் செய்தேன்'' என்று உருக்கமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருப்பது அவரது ரசிகர்களிடைய வைரலாகி வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai