சமையல்! சமையல்!

முதலில் அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் மூன்று மணி நேரம் ஊற வைக்களம்.
சமையல்! சமையல்!


கேபேஜ் ஊத்தப்பம்

தேவையானவை:

அரிசி - அரைகிலோ
துவரம் பருப்பு - கால் கிலோ
முட்டை கோஸ் - கால் கிலோ
கேரட் - கால் கிலோ
மிளகாய் வற்றல் - 10
வெங்காயம் - 100 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
புளி - சிறு எலுமிச்சை அளள
தேங்காய் - 1 முற்றியது

செய்முறை: முதலில் அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் மூன்று மணி நேரம் ஊற வைக்களம். முட்டை கோஸ், வெங்காயம் இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளளம். கேரட்டை துருவிக் கொள்ளளம். மிளகாயை சிறிது எண்ணெய்விட்டு, வாணலியில் வறுத்து எடுத்து, அத்துடன் தேங்காயையும், சிறிது புளியையும் சேர்த்து அரைக்களம். சிறிது அரைத்தளடன், ஊற வைத்த அரிசி, பருப்பு இரண்டையும் இத்துடன் சேர்த்து அரைக்களம். தண்ணீரை அளவாக விட்டு அரைக்க வேண்டும்.

அந்த மாவை தனியாக எடுத்துக் கொண்டு, அதில் கேரட், முட்டைகோஸ், வெங்காயம் இவற்றைப் போட்டு, நன்றாக கலக்களம். உப்பையும் சேர்த்துக் கலக்களம். பிறகு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி, ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஊத்தப்பம் மாதிரி ஊற்றி, இருபுறமும் சிவக்க வெந்த பின்பு எடுத்து சூடாய் பரிமாற வேண்டும்.

தால் மக்கானி

தேவையானவை:

கருப்பு ஊளுந்து - 1 கிண்ணம்
கடலைப் பருப்பு - கால் கிண்ணம்
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளள
பிச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கொத்துமல்லி தூள் - அரை மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளள
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 5 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிதளள

செய்முறை: உளுந்தையும், கடலைப் பருப்பையும் இரள முழுவதும் ஊற வைக்களம். குக்கரில் போதுமான அளள தண்ணீர் ஊற்றி, சிறிதளள உப்பு சேர்த்து பருப்பு, உளுந்தை சேர்த்து வேக வைத்து இறக்களம். வாணலியில் சிறிதளள எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் சீரகத்தைப் போட்டுக் கிளறளம். பின்னர், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்களம்.

நன்கு வதங்கியதும், கொத்துமல்லித்தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், தக்காளி, மிளகாய், இஞ்சி- பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்களம். பின்னர், வேகவைத்த பருப்பு, உளுந்தைக் கொட்டி நன்றாக கிளறி எல்லாம் வெந்ததும் இறக்களம்.

அதில் வெண்ணெய், கொத்துமல்லித் தழைத் தூவி பரிமாறளம். இதற்கு பெயர்தான் தால் மக்கானி. "தால்' என்றால் பருப்பு, "மக்கானி' என்றால் வெண்ணெய். தால் மக்கானியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நீரிழிள, ரத்த கொதிப்பு, இதயம் சார்ந்த நோய்கள் போன்றவை வராமல் தற்காத்துக் கொள்ளலாம். கருப்பு உளுந்து உடலுக்கு மிகளம் நல்லது.

சோளம் கேக்

தேவையானவை:

பெரிய சோளம் - 1
சர்க்கரை, நெய் - தேவைக்கேற்ப
முந்திரி - 10
பாதாம் பருப்பு - 25கிராம்
ஏலப்பொடி - 1 சிட்டிகை
வறுத்த கடலை மாள - 1 தேக்கரண்டி

செய்முறை: சோளத்தை உதிர்த்து, வாணலியில் சூடு வரும் வரை வறுத்து, அரைத்து பொடித்துக் கொள்ளளம். முந்திரி, பாதாம் இவைகளைப் பொடித்து வைத்துக் கொள்ளளம்.

சோளப் பொடியின் அளவைப் போன்று, இரண்டு மடங்கு சர்க்கரையை கம்பிப் பாகிற்கு காய்ச்சளம். சர்க்கரைப் பாகில் பொடித்து வைத்த சோளப் பொடியைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாய் கிளறளம்.

சோளப் பொடியின் அளவிற்கு சரிக்கு சரியாக நெய் சேர்த்து, அத்துடன் பொடித்த முந்திரி, பாதாம் இவைகளைக் கலந்து நன்றாக கிளறி, வாணலியில் ஒட்டாமல் வந்தளடன் சிறிதளள குங்குமப்பூவை பாலில் கரைத்து விட்டு, வறுத்த கடலை மாவையும் சேர்த்து கிளறி தளதளவென்று சேர்ந்து வரும் சமயம் அகலமான தாம்பாளத்தில் கொட்டி ஆறிய ளடன் துண்டு போடளம். சுவையான சோளம் கேக் ரெடி. வளரும் குழந்தைகளுக்கு சிறந்த புரோட்டின் உணள ஆகும்.

நெல்லிக்காய் பச்சடி

தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் - 4
தயிர் - 2 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
வெள்ளரிக்காய் - 1
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
கறிவேப்பிலை - 2 கைப்பிடி

செய்முறை: நெல்லிக்காய் (விதை நீக்கியது) தேங்காயுடன் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளளம். ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து, நன்கு கலக்களம். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, துருவிய வெள்ளரி ஆகியவற்றை சேர்த்து கலக்களம், பின் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இதில் கலந்து பரிமாறளம்.

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மற்றும் புரோ பயாடிக் நிறைந்த தயிர் இரண்டும் சேர்த்த இந்த நெல்லிக்காய் பச்சடி, ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு உணள. செய்வதற்கும் எளிது. வெயிலுக்கும் நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com