சமையல் சமையல்!

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உளுந்தம் பருப்பையும் மிளகாய் வற்றலையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுக்கவும்.
சமையல் சமையல்!

பீர்க்கன் தோல் தோசை

தேவையானவை
தோசை மாவு - 1 கிண்ணம்
பீர்க்கங்காய் தோல் - அரை கிண்ணம்
உளுத்தம் பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
புளி - கோலிக்குண்டு அளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உளுந்தம் பருப்பையும் மிளகாய் வற்றலையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுக்கவும். அதே வாணலியில், பீர்க்கங்காய்த் தோலைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும். ஆறியதும், தேங்காய்த் துருவல், வறுத்த உளுந்து, மிளகாய் வற்றல், புளி, சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து தோசைமாவுடன் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி கலந்து வைத்துள்ள மாவை சற்றே கனமான தோசையாக வார்த்து, எடுத்து, சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும்.

முடக்கற்றான் தோசை

தேவையானவை:
இட்லி அரிசி - 1 கிண்ணம்
முடக்கற்றான் கீரை - 1 கைப்பிடி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை: அரிசி, வெந்தயம் இரண்டையும் நன்றாக கழுவி, 3 மணி நேரம் ஊற வைக்கவும். முடக்கற்றான் கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்து அலசி வைக்கவும். அரிசி, கீரையை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பின்னர் உப்பு போட்டு கரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவு புளித்ததும், தோசையாக வார்த்து, காரசாரமான கார
சட்னியுடன் பரிமாறவும்.

சிவப்பரிசி புட்டு


தேவையானவை:
சிவப்பரிசி புட்டு மாவு - 100 கிராம்
நெய் - 100 மில்லி
சர்க்கரை - 150 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
வறுத்த முந்திரி பருப்பு - 10
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

செய்முறை: புட்டு மாவுடன் சிறிதளவு சூடான தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசறவும். பின்னர் அதை புட்டுக் குழலில் அடைத்து, ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், சர்க்கரை ஆகியவற்றை வறுத்து உடைத்த முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

கீரை அடை


தேவையானவை:
முருங்கைக் கீரை - 1 கைப்பிடியளவு
இட்லி அரிசி - 200 கிராம்
துவரம் பருப்பு , கடலை பருப்பு - தலா 100 கிராம்
மிளகாய் வற்றல் - 4
இஞ்சி - 1 சிறிய துண்டு
எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். துவரம் பருப்பு, கடலை பருப்பு, ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அரிசியைக் களைந்து, அதனுடன் மிளகாய் வற்றல், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு சேர்த்து லேசாக கொர கொரப்பாக அரைத்து, ஊறவைத்த பருப்பு கலவை, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய முருங்கைக் கீரையைச் சேர்த்து கலந்து கொள்ளவும். சூடான தவாவில் மாவை பரவலாக ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com