கேரள மாணவி  பாடிய ஹிமாசலி  பாடலுக்கு பிரதமர்  பாராட்டு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி தேவிகா.
கேரள மாணவி  பாடிய ஹிமாசலி  பாடலுக்கு பிரதமர்  பாராட்டு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி தேவிகா. மனோரமா செய்தி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான "ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்' நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்ற ஹிமாசலி பாடலான "சம்பா கித்னி கி தூர்' என்ற பாடலை இனிய குரலில் பாடினார்.

மாணவி தேவிகா இனிய குரலில் பாடிய பாடலைக் கேட்டு ஹிமாசல பிரதேச மாநிலத்தின் இதயத்தை வென்றுவிட்டதாக அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். மாணவி தேவிகாவை தனது மாநிலத்துக்கு விருந்தினராக வருமாறு அழைப்பு விடுவித்துள்ளார் அம்மாநில முதல்வர். இதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மாணவி தேவிகாவைப் பாராட்டியுள்ளார். மேலும் தேவிகாவை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அவரது மெல்லிசைக் குரலானது ஒரே இந்தியா, சிறந்த இந்தியாவின் சிந்தனையின் சாராம்சத்துக்கு வலுசேர்க்கிறது எனக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மாணவி தேவிகா கூறியது, ""என்னால் நம்பவே முடியவில்லை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அந்தப் பாடலைப் பாடும்போது இந்திய பிரதமராலேயே பாராட்டப்படுவேன் என எதிர்பார்க்கவில்லை'' என்றார்.

மேலும் கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஏ.கே.பாலன் தொலைபேசியில் தேவிகாவை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com