வேலைப் பளுவா? அணியுங்கள் ஆரஞ்சு வண்ண ஆடை!

வீட்டிலும்  சரி அலுவலகத்திலும் சரி இடைவிடாத  வேலைப்பளு  இருந்தால் அதற்குத் தேவையான  உத்வேகம்  கொடுக்கும்  சக்தி  ஆரஞ்சு  நிறத்திற்கு  உண்டு. 
வேலைப் பளுவா? அணியுங்கள் ஆரஞ்சு வண்ண ஆடை!


வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி இடைவிடாத வேலைப்பளு இருந்தால் அதற்குத் தேவையான உத்வேகம் கொடுக்கும் சக்தி ஆரஞ்சு நிறத்திற்கு உண்டு. எனவே, வேலைப் பளு அதிகம் இருக்கும் நாள்களில் ஆரஞ்சு நிற ஆடை அணிந்து கொண்டால் சோர்வின்றிப் பணியாற்றலாம். ஜெர்மனி நாட்டில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் இது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வலிமை, மன தைரியம், கம்பீர தோற்றம் இவைகளுக்கு சிவப்பு நிறம் சாலச்சிறந்தது. பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், சிறப்புரை ஆற்ற போகும்போது சிவப்பு ஆடை அணிந்து கொண்டு செல்லலாம்.

பணி நியமனத்திற்கான நேர்முகத் தேர்வுக்குப் போகும்போது மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது. மஞ்சள் நிறம் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் தன்மையுடையது.

விருந்துக்குச் செல்லும்போது, ரோஸ் நிறத்தில் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் உடை அணிந்தால் விருந்தில் மனமகிழ்ச்சியும், நிறைவும் கிடைக்கும்.

நாள் முழுவதும் உழைத்துவிட்டு ஓய்வு வேண்டுவோர் பச்சை நிற உடை அணிய வேண்டும். அதுபோன்று உல்லாசப் பயணம் போகும்போதும் பச்சை நிற உடை ஆனந்தம் தரும். மனக்கவலையை அகற்றும்.

சந்தன நிற உடை அணிந்தால் நடைமுறைக்கு ஏற்றவாறும் உற்றார், உறவினர், நண்பர்கள் பாராட்டும் வண்ணம் அமையும்.

நீல நிற ஆடை அணிந்து கொண்டால் கனவு தொல்லை இல்லாமல் நிம்மதியான உறக்கம் வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com