சமயல்.. சமயல்...:  இந்த வாரம் கிராமிய சமையல் 

சமயல்.. சமயல்...:  இந்த வாரம் கிராமிய சமையல் 

மரவள்ளிக்கிழங்கை நன்கு கழுவி, வேகவைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் மசித்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும்.

மரவள்ளிக்கிழங்கு பாயசம்

தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ
பால் - 3 டம்ளர்
சர்க்கரை - ஒரு கிண்ணம்
நெய்யில் வறுத்த முந்திரி - 8
ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - தலா ஒரு சிட்டிகை
தேங்காய்ப் பால் - ஒரு டம்ளர்

செய்முறை: மரவள்ளிக்கிழங்கை நன்கு கழுவி, வேகவைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் மசித்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கி... தேங்காய்ப் பால் சேர்த்துப் பரிமாறவும்.

நீர் உருண்டை


தேவையானவை:
புழுங்கலரிசி - ஒரு கிண்ணம்
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
உளுந்தம்பருப்பு,
கடலைப்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... அதனுடன் அரைத்து வைத்துள்ள மாவைச் சேர்த்து கை விடாமல் நன்கு கிளறவும். மாவு வாணலியில் ஒட்டாமல் பந்து போல வரும் சமயம் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். மாவு சற்று ஆறியதும் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கலாம். மாவை உருட்டி உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டி, இட்லித்தட்டில் வேகவிட்டும் எடுக்கலாம்.

வேர்க்கடலை சின்ன வெங்காய சட்னி

தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை - ஒரு கிண்ணம்
(தோல் நீக்கவும்),
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
சின்ன வெங்காயம் - 10
புளி - சிறிதளவு
பூண்டு - 4 பல்
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 7
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... வேர்க்கடலை, சின்ன வெங்காயம், புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் கொத்தமல்லித் தழை, உப்பு, பூண்டு சேர்த்து சட்னியாக அரைத்தெடுக்கவும்.

நாரத்தை இலை ரசம்

தேவையானவை:
நாரத்தை இலை - 6
கொத்துமல்லித் தழை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
கடுகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
எலுமிச்சம் பழச் சாறு - 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - சிறிதளவு

செய்முறை: நாரத்தை இலை, கொத்துமல்லித் தழை, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளிக்கவும். இதில் பொடித்து வைத்த கலவையை சேர்த்து லேசாக வதக்கி, 3 கப் நீர் சேர்க்கவும். பிறகு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

அரிசி உளுந்து கஞ்சி

தேவையானவை:
புழுங்கல் அரிசி நொய் - ஒரு கிண்ணம்
கறுப்பு உளுந்து - ஒரு கைப்பிடி அளவு
சீரகம் - 2 தேக்கரண்டி
பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கவும்)
வெந்தயம் - கால் தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
மோர் - தேவையான அளவு

செய்முறை: புழுங்கல் அரிசி நொய்யுடன் 4 டம்ளர் நீர் சேர்த்து, கறுப்பு உளுந்து, சீரகம், வெந்தயம், நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததும் மோர், உப்பு சேர்த்துப் பருகலாம்.

கொள்ளுப் பொடி


தேவையானவை:
கொள்ளு - ஒரு கிண்ணம்
உளுந்தம்பருப்பு - அரை கிண்ணம்
காய்ந்த மிளகாய் - 15
கட்டிப் பெருங்காயம் - ஒரு துண்டு
கொப்பரைத் துருவல் - கால் கிண்ணம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுந்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும். கொப்பரைத் துருவலை சிவக்க வறுக்கவும். கொள்ளுவை சுத்தம் செய்து வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கவும். வறுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஆறியதும் ஒன் றாகக் கலந்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று பொடிக்கவும்.

இந்தப் பொடியுடன் நல் லெண்ணெய் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டால்... அசத்தல் சுவையில் இருக்கும். சூடான சாதத்தில் எண்ணெய் விட்டு இதை கலந்து சாப்பிடலாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com