வாழ்க்கையை சிதறடிக்காதீர்கள்!

வாழ்க்கைத் துணை  முக்கியமா  இல்லையா  என்றெல்லாம்  பட்டிமன்றம்  நடத்த வேண்டாம்.
வாழ்க்கையை சிதறடிக்காதீர்கள்!

வாழ்க்கைத் துணை முக்கியமா இல்லையா என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்த வேண்டாம்.
சின்ன கோபங்கள், கருத்து வேறுபாடுகள், பிரச்னைகளை நீர்குமிழிப் போல உடைத்து விடலாம். அதை கவனிக்காமல் விஸ்வரூபம் எடுக்கச் செய்தால் வாழ்க்கை விரக்தியாகி விடும்.
கணவனுடன் உங்களுக்கிருப்பது ஒரு பிரச்னை தானே தவிர, போட்டியல்ல, அதில் வெற்றி பெற வேண்டும் என்று வீம்புடன் இறங்காதீர்கள்.
எப்படியாவது கணவனைத் தோற்கடிக்க வேண்டும் என்ற மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
நான் மேலானவனா, வாழ்க்கைத் துணை மேலானவளா என்று ஒன்றில் இரண்டு பார்த்துவிடுவோம் என்று போட்டியில் இறங்கினால் பலன் விபரீதமாகி விவாகரத்தாக மாறிவிடலாம்.
கௌரவப் போராட்டமாக நினைக்காமல், பேசித் தீர்க்க வேண்டிய ஒரு சிக்கல் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். வாழ்க்கைத் துணை மீது பழிபோடுவதை நிறுத்தி, பிரச்னைக்கு இருவருமே பொறுப்பானவர்கள் என்பதைப் புரிந்து செயல்படுங்கள்.
மற்றவரிடம் குற்றங்களைத் தேடுவதை விட்டுவிட்டு, உங்களிடமுள்ள குறைகளை முதலில் ஆராயத் தொடங்குங்கள்.
ஒருவர் உரக்கக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும்போது, மற்றவர் அடங்கிப் போய்விடுவதுதான் புத்திசாலித்தனம். இரண்டு கைகளும் சேர்ந்தால் ஓசைதான் அதிகமாகும். அமைதி நிலவாது. இதைக் கடைப்பிடிப்பது சிறிது சிரமம்தான். பதிலுக்கு, கதவை மூடிவிட்டு உங்கள் பக்க, நியாயங்களை உரக்கக் கத்தித் தீர்த்துவிடுங்கள். நீங்கள் பேச வேண்டியதை பேசித் தீர்ந்தால் குறை நீங்குவதுடன், அதே சமயம் பிறர் காதில் விழாததாகவும் அமைந்துவிடும்.
விளைவு: மனதில் உள்ள பாரத்தை இறக்கிய பின் நீங்களும் இயல்பு நிலைக்கு வந்து விடுவீர்கள்.

- பொம்மை சாரதி எழுதிய "பெண்களுக்கு' என்ற நூலிலிருந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com