சமையல் சமையல்!

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு அது மூழ்கும் அளவுக்கு சுடு நீர் ஊற்றிக் கிளறி மூன்று மணி நேரம் வைக்கவும். நடுவே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கிளறி விடவும்.
சமையல் சமையல்!

பனீர் கபாப்

தேவையானவை :

பனீர் துண்டுகள்- 10
சதுரமாக வெட்டிய வெங்காயம்,
தக்காளி - தலா 4 துண்டுகள்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
டிக்கா குச்சிகள் - தேவைக்கேற்ப
கடலை மாவு - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி
அரிசி மாவு- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தயிர்- 1 தேக்கரண்டி
சோம்பு பொடி- அரை தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர், சோம்பு பொடி, மிளகாய்த்தூள், சிறிது உப்பு, நீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும் வெட்டிய பனீர் துண்டுகள், வெங்காயம், தக்காளியை இதில் முக்கி எடுக்கவும் டிக்கா குச்சியில் முதலில் பனீர் துண்டு பிறகு தக்காளி, வெங்காயம், மீண்டும் பனீர் துண்டுகள் என நெருக்கமாக குத்திக் கொள்ளவும். இதே மாதிரி எல்லா குச்சியிலும் சொருகிக் கொள்ளவும். ஒரு பானில் எண்ணெய் சிறிது விட்டு சூடானதும், காய்கறி பனீர் சொருகிய குச்சிகளை வரிசையாக அடுக்கி பொரிக்கவும். எல்லாபுறமும் நன்கு பொரிந்தவுடன் எடுத்து பரிமாறவும். (இதை தணலிலும் நேரடியாகச் சுட்டு சாப்பிடலாம்.

ஃபுரூட் கூல் அல்வா

தேவையானவை;

கோதுமை மாவு- 1
சுடுநீர்- 2 டம்ளர்
சர்க்கரை- 2 கிண்ணம்
கொய்யாப்பழ விழுது- அரை கிண்ணம்
கொய்யாப்பழதுண்டுகள்- தலா 2 தேக்கரண்டி
முந்திரி- பாதாம் துண்டுகள் - தலா 2 தேக்கரண்டி
ஆரஞ்சு ஃபுட் கலர்- சிறிது
நெய்- தேவைக்கேற்ப
ஜெல்லி மிட்டாய்- அலங்கரிக்க

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு அது மூழ்கும் அளவுக்கு சுடு நீர் ஊற்றிக் கிளறி மூன்று மணி நேரம் வைக்கவும். நடுவே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கிளறி விடவும். பிறகு பெரிய கண் உடைய வடிகட்டியால் வடி கட்டவும். திப்பி மேற்புறம் தங்கிவிடும். வடிகட்டிய மாவு நீரில், தேவையான அளவு நீர் விட்டு, அடிகனமான வாணலியில் சுருளக் கிண்டவும். சுருண்டு வரும்போது நெய் சேர்க்கவும். மாவு வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். அது கரைந்ததும் ஃபுட் கலர் சேர்த்து, முந்திரி, பாதாம் துண்டு சேர்த்துக் கிளறி, கொய்யாப்பழக் கூழ் சேர்த்து இறக்கி ஆறவிடவும். பரிமாறும் கண்ணாடி கப்பின் அடியில் நறுக்கிய கொய்யாப் பழத் துண்டுகளைச் சேர்த்து, அதன்மேல் வெந்த அல்வா சேர்த்து, மேலே ஜெல்லி மிட்டாய் களை வைத்து ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். சுவையான ஃபுரூட் கூல் அல்வா தயார்.

ஸ்வீட் பூந்தி

தேவையானவை:

கடலை மாவு - 1 கிண்ணம்
அரிசி மாவு - அரை கிண்ணம்
நெய் - 150 கிராம்
முந்திரி பொடி- 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
ஏலக்காய்ப் பொடி- அரை தேக்கரண்டி
சர்க்கரை - ஒன்றரை கிண்ணம்

செய்முறை:

கடலை மாவு, முந்திரி பொடி, அரிசி மாவுடன் உருக்கிய நெய் மற்றும் நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், பூந்தி கரண்டியில் மாவை போட்டுத் தேய்த்து, காரசேவை பொரித்து எடுக்கவும். வேறு பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது நீர் சேர்த்து பாகு காய்ச்சி அதில் ஏலக்காய்ப்பொடி சேர்த்துக் கிளறவும். பொரித்தெடுத்த காரசேவை அதில் போட்டுக் கிளறி அடுப்பை நிறுத்தவும். தட்டில் இதைப் பரவலாகக் கொட்டி ஆற விட்டு பரிமாறவும்.

கார பிஸ்கட்

தேவையானவை:

கோதுமை மாவு - அரை கிண்ணம்
மைதா, அரிசி மாவு - தலா கால் கிண்ணம்
உலர் வெந்தய இலை (மேத்தி) - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
ஓமம் - சிறிது
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - சிறிது
வெதுவெதுப்பான பால் -
மாவு பிசையத் தேவையான அளவு.

செய்முறை:

வாய் அகன்ற பாத்திரத்தில் மாவுகளுடன் எண்ணெய் தவிர்த்த மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும். அதனுடன் சிறிது காய்ச்சின வெதுவெதுப்பான பால் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்கு கெட்டியாகப் பிசையவும். பிறகு சப்பாத்தியாக இட்டு, விருப்பத்திற்கு ஏற்ப வடிவத்தில் பிஸ்கட் கட்டரால் மாவில் அழுத்தி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், இந்த பிஸ்கட்களைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பல நாட்கள் பத்திரமாக வைத்திருந்து இதை சாப்பிடலாம். (பிஸ்கட் கட்டர் இல்லையென்றால், கத்தியால் சதுரமாகவோ, டைமண்ட் வடிவிலோ வெட்டி எடுத்துப் பொரித்து சாப்பிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com